FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 16, 2014, 08:47:42 PM

Title: ~ தண்ணீர் மருத்துவம்:- ~
Post by: MysteRy on April 16, 2014, 08:47:42 PM
தண்ணீர் மருத்துவம்:-

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/10156018_716465035042481_6669625619837889899_n.jpg)


நமது உடல் 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலில் 10 சதவீதம் நீர் குறைந்தால் உடல் நலம் கெடுகிறது. 20 சதவீதம் குறைந்தால் உயிர் போகிறது. தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்த வேண்டும் என்பது சரியல்ல. ஒரு நாளைக்கு ஒரு மனிதன் குறைந்தது 8 டம்ளர் நீராவது அருந்த வேண்டும். தண்ணீர் போதிய அளவு பருகாவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும். நீர் குறைந்து அதிலுள்ள உப்புக்கள் கல்லாகி சிறுநீரகத்தில் தங்கிவிடும். மலம் கெட்டியாகி மலச்சிக்கல் மற்றும் மூல நோய்கள் ஏற்படும். தலைவலி, நரம்புத்தளர்ச்சி, பசியின்மை ஏற்படும். தண்ணீர் அடிக்கடி பருகுவதால் உணவு சரியாக செரிக்கும். சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு நன்கு சுரக்கும். இரத்தம் உடலெங்கும் பரவும். உடலின் நச்சுப் பொருட்கள் கண்ணீர், வியர்வை, சிறுநீரகமாக வெளியேறும். சருமம் பளபளக்கும். எலும்பு பலப்படும். காலரா நோய் வந்து வாந்தியெடுப்பவர்கள் நீர் அளவு உடலில் குறைந்தே இறக்கிறார்கள். வயிற்றுப் போக்கால் இறப்பு ஏற்படுவதற்கும் இதுவே காரணம். இந்நிலைமையில் நிறைய நீர் பருகினால் சாவிலிருந்து மீள முடியும். கடும் காய்ச்சல் எற்பட்டு அதிகக் கெடுதல்கள் நேராமலிருக்கத் தண்ணீர் அடிக்கடி பருகுவது மிகவும் உபயோகமானதாகும்