FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on April 13, 2014, 08:26:50 PM
-
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1 கப் உருளைக்கிழங்கு - 1 கப் காலிஃப்ளவர் - 1 கப் முந்திரி - 1 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) சீரகம் - 1 டேபிள் தூள் இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (அரைத்தது) கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, முந்திரியை போட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வேக வைத்த முந்திரி, வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய் பேஸ்ட் சேர்த்து தீயை குறைவில் வைத்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் காய்கறிகளைப் போட்டு, மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
காய்கறிகளானது நன்கு வெந்தமும், அதில் வெந்தய இலையை தூவி, பின் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் கலவையை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மிக்ஸ்ட் வெஜிடேபிள் முந்திரி குழம்பு ரெடி!!!