FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on April 13, 2014, 05:16:03 PM
-
கேள்வி ..
விலகி போன உன்னிடம்
விலகமுடியாத என்
எண்ணங்களின் கேள்வி ..
நாம் ஸ்ருஷ்டித்த
நகர முடியாத தருணங்கள்
நரகமாகி போனதா ?
விலக முடியாத
விழிகளின் பார்வையில்
விரகம் வழிந்தொளிந்து
வெறுப்பு ஊற்று கண்டதா ..?
தவிர்க்க முடியாத
தருணமென்று
தானாய் தழுவிய கரங்கள்
தளர்வுற்று போனதா ?
வாழா இருடி என
வழவழக்கும்
வாய் தொட்டு
இதழ் அழைந்த
மோகம் தீர்ந்ததா ?
இடை படர்ந்த
இளையகரம்
இதழ் நீவும்
இதம் தொலைத்து
இறுமாந்த செயல் இன்று
இசைவிழந்து போனதேன் ?
இதழ் தீண்ட நீ வேண்டாம்
இதம் கொடுக்க நீ வேண்டாம்
இன்பம் தேட நீ வேண்டாம்
இந்த இம்மைக்கும் நீ வேண்டாம் ..
இதுகாறும் நீ இருந்த நெஞ்சை
என்ன செய்ய சொல்லிச் செல்
இதயம் அமைதி பெற
வழியுண்டா காண்கிறேன் ...
-
மேகத்தின் சேதியது
மேனியிலே பட்டவுடன்
தாகமெடுக்கிறதோ
தனிமை தவிக்கிறதோ?
பூவெல்லாம் பேசியதும்
புல்செடியும் கேட்டவுடன்
பூவைக்கு இனிக்கிறதோ
பூவைக்கத் துடிக்கிறதோ?
வழியெங்கும் பசுமரங்கள்
வாழ்த்தாக தூவியே
பூமழை பொழிகிறதோ
புதுப்பாதைத் தெரிகிறதோ
பச்சைக்கிளியும் புறாவும்
பக்கமாய் நெருங்கியே
இச்சைச் செய்வது
இம்சையாய் இருக்கிறதோ?
இளம்மனது கருகியதால்
இன்பத்தை இழந்துவிட்டு
இப்போது ஏக்கத்தையே
இனிமையாக்க மறுப்பதோ?
தவறென்ன வாழ்கையில்
தைரியமாய் செய்யுங்கள்
உறவங்கே மறுத்தாலும்
உரிமையாய் தொடருங்கள்...