FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 12, 2014, 08:16:49 PM

Title: கலப்பட காதல்
Post by: thamilan on April 12, 2014, 08:16:49 PM
உருவம் பார்த்து உடல் பார்த்து
வருவதல்ல அன்பும் காதலும்
நல்ல இதயங்களின் ஒன்று கூடலே
அன்பும் காதலும்

ஆனால் இன்று
எதிலும் உண்மை இல்லை
கலப்பட உலகில் வாழும் நாம்
வாழும் வாழ்விலும் கலப்படமே

வெறும் கவர்ச்சி விளம்பரங்களில்
ஏமாறும் மனிதர்கள் நாம் தானே
விட்டில் பூச்சிகள்
குமிழ் விளக்கில் வீழ்ந்து தான் மடியும்
குத்துவிளக்கில் வீழ்ந்து மடிவதில்லை
அவை வீழக்காரணமும் கவர்ச்சி தானே

அண்ணா எனும் வார்த்தையிலும்
உண்மை இல்லை
அன்பே எனும் வார்த்தையிலும்
உண்மை இல்லை
ஒரு மனிதனின்
பேச்சுதிரன் அகவெளிப்பாடுகளை வைத்து
உண்டாகும் அன்போ காதலோ
அதிக நாள் நீடிப்பதில்லை
அது இன்னொறுவனிடம் கூடுதலாக தோன்றும் போது
அங்கே தாவிவிடும்