FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 12, 2014, 12:23:43 AM
-
காதல் ஒரு அதிசய உலகம்
அஙகே காயங்கள் கூட
பூக்கள் ஆகிவிடுகின்றன
கண்ணீர் துளிகள் கூட
நட்சத்திரங்கள் ஆகிவிடுகின்றன
துன்பங்கள் கூட
சுகமானதாகி விடுகின்றன
காதல் இயற்கை நியதி
காதல் இல்லாதவர் இதயம்
களிமண்ணால் ஆன இதயம்
நெருப்பு என்றால்
சூடு இருக்க வேண்டும்
நீர் என்றால்
குளிர்ச்சி இருக்க வேண்டும்
மலர் என்றால்
மணம் இருக்க வேண்டும்
மனிதன் என்றால்
காதல் இருக்க வேண்டும்
-
நெருப்பு என்றால்
சூடு இருக்க வேண்டும்
நீர் என்றால்
குளிர்ச்சி இருக்க வேண்டும்
மலர் என்றால்
மணம் இருக்க வேண்டும்
மனிதன் என்றால்
காதல் இருக்க வேண்டும்
காதல் உணர்வுகளை இயற்கையோடு சேர்த்து அருமையாக வெளிப்படுத்தியிருக்கீங்க. வாழ்த்துக்கள் டமால் :D :D :D :D