FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on April 11, 2014, 08:11:51 PM

Title: ~ கருப்பு வெள்ளை மீன்கொத்தி பறவை பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on April 11, 2014, 08:11:51 PM
கருப்பு வெள்ளை மீன்கொத்தி பறவை பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10001376_591283044302492_8160483348515433320_n.jpg)


பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி அல்லது கரும்புள்ளி மீன்கொத்தி (Pied Kingfisher, Ceryle rudis) ஒரு நீர் மீன்கொத்தி. இதன் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறச்சிறகுகளைக் கொண்டிருப்பதால் கருப்பு வெள்ளை மீன்கொத்தி என்றழைக்கப்படுகிறது. இது நீர்நிலைகளில் மீன்களைப் பாய்ந்து பிடிக்கும் முன்பு பறந்து கொண்டிருக்கும். இப்பறவை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பரவலாகக் காணபடுகிறது. இப்பறவையே மீன்கொத்திகளில் பொதுவாகக் காணப்படும் மூன்றாவது மீன்கொத்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவை மீன்களையே முதன்மை உணவாகக் கொண்டாலும் பெரிய நீர்வாழ் பூச்சிகளையும் உண்ணும். இதன் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையாகும்.