தன்னம்பிக்கை சிந்தனைகள் :-
(https://scontent-b-kul.xx.fbcdn.net/hphotos-prn1/t1.0-9/1538895_592153617548768_8537405571975704645_n.jpg)
1. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.
2. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.
3. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.
4. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.
5. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.
6. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.
7. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.
8. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.
9. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.
10. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.
11. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டுவோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர்களே செல்லாக்காசுகளாகிறார்கள்.
12. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.
13. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.
14. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்
15. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.
தன்னம்பிக்கை சிந்தனைகள் :-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10313760_609198082510988_1364168142814373042_n.jpg)
1. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.
2. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..
3. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும்
அஞ்சாமல் முன்னேறு...
4. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே...
5. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்...
6. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு...
7. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.
8. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.
9. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.
10. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.