FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 28, 2011, 05:13:39 AM

Title: காமெரெட்
Post by: Global Angel on November 28, 2011, 05:13:39 AM
காமெரெட்


மனமென்னும்
இருட்டறைக்குள்ளே
சிறைபட்டேன் சிலகாலம்
அங்கு உலாவ
நந்தவனம் இல்லை
படுக்க பள்ளியறை இல்லை
உண்ண உணவில்லை
அருந்த நீரில்லை
இருட்டில் குருடனைப்
போல் அரற்றினேன்
இரண்டு முழங்கால்களையும்
இறுக பிடித்துக் கொண்டு
மூச்சு முட்டிக்கொண்டு
சோர்வுற்று வெளியேற
முயன்று தோற்று
இதய சுவற்றை
குத்திக்கிழித்து அதில்
பீய்ச்சியடித்த
ரத்தக் குழம்பில் நனைந்து
வெளியேறி
பிணத்தின் மீது
நடந்து சென்றேன்
உலகம் என்னை பார்த்து
இவன்தான் உண்மையான
கமரெட் என்றது
என்கையில் சிவப்புநிற
கொடி கொடுத்தது அதில்
அருவாளும் சுத்தியலும்
எனக்கோ
வயிற்றுப் பசி தாகம்
நீரும் உணவும் கொடுக்க
யாரும் உண்டா என்று
அங்குமிங்கும் என்கண்கள்
வட்டமிட்டது
பார்க்குமிடமெல்லாம்
மனித உடல்கள்
சிதறி சின்னாபின்னமாகி
காக்கைகூட உடல்களை
தின்னவில்லை
கண்ணுகெட்டியவரை
மனித உடல்கள்
கையிலிருந்த கொடியை
கீழே வீசிவிட்டு
பிணங்களின் மீது
நடந்து சென்றேன்.


padihathil pidithahu  ;)