FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 28, 2011, 05:09:25 AM
-
எதற்கு இந்த கொடுமைகள்
சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவன் சக மாணவியை செல்போனில் தவரானவகையில் போட்டோ எடுத்து அதை உடன் படிக்கும் மாணவர்களுக்கும் காண்பித்ததாக ஒரு செய்தியை பார்த்தேன், இந்த வகையான செய்தி வெளிவருவது முதல் முறையும் அல்ல புதியதும் அல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மீண்டும் மீண்டும் இதே மாதிரியான ஏமாற்றங்களுக்கு காரணம் என்ன, ஏற்கனவே வெளியாகிய செய்திகள் இவர்களை சென்று அடையவில்லை என்று தெரிகிறது. அல்லது செல்போன் வாங்கி கொடுக்கும் போதே பெற்றோர் பிள்ளைகளிடம் இது மாதிரியான சம்பவங்களை மேற்கோள் காட்டி அது போன்று ஏதும் நடந்தால் செல்போனை திரும்ப கொடுத்துவிடவேண்டும் அல்லது அதற்குரிய தண்டனைகளை சொல்லிகொடுத்த பிறகு செல்போனை வாங்கி கொடுக்கத் தவறுவதும் ஒரு காரணம்.
சீட்டுக்கம்பனிகளில் லட்சகணக்கில் பணத்தை கட்டிவிட்டு மோசம் போகின்றவர்களின் செய்கையும் சீட்டுகம்பனிகள் என்ற பெயரில் தொடங்கப்படும் எமாற்றுகாரர்களும் கூட எத்தனையோ முறை இதே வகையான திருட்டுத்தனத்தை கடைபிடித்துள்ளனர், ஆனாலும் மீண்டும் மீண்டும் மக்கள் சீட்டுக்கட்டி ஏமாறுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது, இதற்க்குக் காரணமும் ஏற்கனவே வெளியாகிய பல சீட்டுகம்பனி மோசடிகளைப் பற்றி இவர்கள் அறிந்திராததுதான் காரணமா, அல்லது வேறு ஏதாவது காரணமா.
வில்லிவாக்கத்தில் வீடுகள் கோவில்கள் கடைகள் புகுந்து பூட்டுகளை உடைத்து அங்கிருந்த நகைப் பணம் போன்றவற்றை அள்ளிக்கொண்டு போன திருடர்களைப் பற்றி என்ன சொல்லுவது, மக்களின் சுயபாதுகாப்பு குறைவா அல்லது திருடர்களின் வெறிச்செயலா, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்று சுலபமாக சொல்லிவிடலாமா, அடிக்கடி திருட்டு கொள்ளை கொலைகள் தொடர்ந்தால் மாநகர காவலைப் பற்றி குறை சொல்லவும், லா அண்ட் ஆர்டர் சரிவர செயல்படுத்தப் படவில்லை, அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டது என்று கூச்சலிடுபவர்களுக்கு கரும்பு தின்ன கூலி கொடுத்தது போலாகிவிடும்.
ஏமாறுகிறவர்கள் இருக்கின்ற வரையில் எமாற்றுகிரவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை மக்கள் ஏட்டுசுரைக்காயாகத்தான் பார்கின்றார்களோ.
ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே,
-
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,