FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 10, 2014, 09:21:05 PM
-
மோர்க்குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2014%2F04%2Fztrlmz%2Fimages%2Fp76b.jpg&hash=52882fe6ebd982a7d96093df7e4e992e54a1d5e5)
தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ, தயிர் - 3 டம்ளர், தேங்காய் - கால் மூடி, பச்சரிசி - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, உப்பு - தேவை யான அளவு.
செய்முறை:
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு, தண்ணீரை வடித்து, அதனுடன் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... ஓரளவு சின்ன துண்டுகளாக வெட்டிய வெண்டைக்காயைப் போட்டு சுருங்க வதக்க வேண்டும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பச்சரி - தேங்காய் மசாலா, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். குழம்பில் பச்சை வாசனை போனதும் கீழே இறக்கி... தயிரை ஊற்றிக் கலக்கி விட்டுவிட்டால்... மோர்க்குழம்பு ரெடி!