FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 05, 2014, 08:04:42 PM

Title: ~ நொடியில் செய்ய இதோ டிப்ஸ்! ~
Post by: MysteRy on April 05, 2014, 08:04:42 PM
நொடியில் செய்ய இதோ டிப்ஸ்!


பாயசம் செய்யும்போது பாலுடன் பாதாம் அல்லது பிரட்டை பொடியாக்கிச் சேர்த்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

அதிரசம் செய்யும்போது அந்த மாவுடன் விதையில்லாத பேரீச்சம் பழங்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து அதிரசம் செய்தால் சுவையாக இருக்கும்.

பயத்தமாவு லட்டு, ரவா லட்டு செய்யும்போது முதலில் ஒரு தாம்பாளத்தில் அரைத்த சர்க்கரையையும் நெய்யையும் போட்டு கலக்கவும். பிறகு அத்துடன் ரவையோ, பயத்தம் மாவையோ போட்டு உருண்டை பிடிக்கவும். தேவைப்பட்டால் பிடிக்கும்போது ரவையுடன் ஒரு கரண்டி பாலைத் தெளித்தும் பிடிக்கலாம். சுலபமாக பிடிக்க வரும்; சுவையும் அதிகமாக இருக்கும்.

பர்பி, மைசூர் பாகு போன்றவற்றை துண்டுகள் போடும்போது சிதறி விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சோமாஸ் செய்யும்போது இதையும் பூரணமாக வைத்து சில சோமாஸ்களை சின்னதாக தயாரித்துவிடுங்கள்.

ரவா கேசரி கிளறும்போது காய்ச்சின பாலையும் சேர்த்துக் கிளறுங்கள். ரவா கேசரியின் சுவை கூடுவதோடு இனிப்பு திகட்டாமல் இருக்கும்.

ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

கேரட் அல்வா நொடியில் செய்ய வேண்டுமா? தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வைத்து வேக வைத்து கூழாக மசித்துக்கொள்ளுங்கள். கடாயில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு, மசித்த கேரட்டுடன், சம அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறினால் கேரட் அல்வா தயார்.