FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: காமினி on April 04, 2014, 01:27:46 PM
-
என இதயத்தை உடைக்காதே
'சாதிகள் இல்லை ' என்று படிக்க
ஏன் சாதி சான்றிதல் கேட்ட பள்ளியில்
உடைந்தது இதயம் அல்ல , என் பிறப்புரிமை
தமிழ் பள்ளியில் ஆங்கிலம் ஆட்சி செய்ய
தாய் மொழி பேச தடை சட்டம்
பெயரில் மட்டும் தமிழனாய் , என் நண்பன்
தமிழ் பேச தயங்கிய போது
உடைந்தது இதயம் அல்ல , என் தாய் மொழி
கனவுகள் சுமந்து கல்லூரியில் காலடி வைக்க
ஏன் அறிவுக்கும் அதிகமாய் இலச்சங்கள் கேட்க
உடைந்தது இதயம் அல்ல , என் இலட்சியங்கள்
கல்லூரியில் கற்று தரா அனுபவ சான்றிதழ் கேட்டு
'வேலை ' என்ற இரண்டு எழுத்து , நான்கு வருட
கல்வியை கனால் நீர் ஆக்கிய போது
உடைத்து இதயம் அல்ல , என் 'எதிர் காலம் '
வாலிபத்தின் வாசலில் வந்த காதலில்
காமத்தின் சாயல் அதிகமாய் தென்பட
உடைந்தது இதயம் அல்ல , என் காதல்
வாழ்க்கைத்துணைக்கு பரிசாய் என் இதயம்
உள்ளதென்று நினைத்தபோது
அவன் வாங்கிய கடன் அடைக்க ,என்னை அடமான
பொருளஆய் பார்த்தபோது
உடைந்தது இதயம் அல்ல, என் எதிர் காலம்
உளி உடைத்த கல் சிற்பமாகும்
பனி குடம் உடைய உயிர் ஜனிக்கும்
மனித மாண்புகள் உடைபட்ட போதும்
மடிந்து போவதில்லை மானுடம்
என்
நம்பிக்கைகள் சாகதவரை
என் இதயம் உடைக்க படுவதில்லை
-
உங்கள் முதல் கவிதை!
பல உணர்வுகளை மனதிற்குள் தூவிச் சென்றது ...
மிக அருமை தோழி!..
-
முதல் கவிதை !! முத்தான கவிதை !! காமினி இதே போல
உங்களின் கவிதை படைப்புகள் நமது பொது மன்றத்தில் அரங்கேற்ற என்னுடைய வாழ்த்துக்கள் காமினி !!
-
நல்ல கவிதை . தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.
-
உளி உடைத்தால் கல் சிற்பமாகும்
பனி குடம் உடைந்தால் உயிர் ஜனிக்கும்
மனித மாண்புகள் உடைபட்ட போதும்
மடிந்து போவதில்லை மானுடம்
என்நம்பிக்கைகள் சாகதவரை
என் இதயம் உடைக்க படுவதில்லை ------------->
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று அழகா
சொலி இருக்கீங்க காமினி nice poem .......
-
உளி உடைத்த கல் சிற்பமாகும்
பனி குடம் உடைய உயிர் ஜனிக்கும்
மனித மாண்புகள் உடைபட்ட போதும்
மடிந்து போவதில்லை மானுடம்
என்
நம்பிக்கைகள் சாகதவரை
என் இதயம் உடைக்க படுவதில்லை
சொன்னது போல இந்த வரிகள் ரொம்ப நம்பிகையோட இருக்கு படிக்க
நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் // வாழ்த்துகள் காமினி தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்..