தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NasRiYa on April 02, 2014, 07:52:48 PM
Title: ஆணினமே எச்சரிக்கை..!!!
Post by: NasRiYa on April 02, 2014, 07:52:48 PM
பெண்களின் கண்கள் தூண்டில்... ஆண்களின் இதயம் அதில் மீன்கள்... நம் விழி மூடினால் உலகம் இருளும்.. பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்... பெண்களின் கண்கள் அகல் விளக்கு... வெளிச்சமும் தரும்... விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்... ஆணினமே எச்சரிக்கை..!!! எதில் வீழ்ந்தாலும் மீளலாம்... பெண்களின் கண்களை தவிர...!!
Title: Re: ஆணினமே எச்சரிக்கை..!!!
Post by: தமிழன் on April 02, 2014, 08:10:39 PM
பெண்களின் கண்கள் தூண்டில் தான் ஆண்கள் அதில் மாட்டிக் கொள்ளும் மீன்கள் தான் ஆனால் என்ன அதிசயம் மீன்களில் மாட்டிக் கொண்ட தூண்டிலுக்குத் தானே ஆயுள் தண்டனை மீன்களிடம் இருந்து கழற முடியாமல் தவிப்பது மீன்கள் அல்லவா
விட்டில் பூச்சிகள் அகல் விளக்கில் விழுவதில்லை ஆடம்பர விளக்குகளில் தான் விழும் அகல்விளக்கையும் அணைக்கக் கூடியது ஆண்கள் எனும் சிறு காற்று
கண்கள் பத்திரம் நஸ்ரியா கண்களில் தூசு விழுந்தாலே தாங்க முடிவதில்லை. ஆண்கள் விழுந்தால் என்னாகும்
Title: Re: ஆணினமே எச்சரிக்கை..!!!
Post by: NasRiYa on April 02, 2014, 08:22:02 PM
கண்கள் பத்திரம் நஸ்ரியா கண்களில் தூசு விழுந்தாலே தாங்க முடிவதில்லை. ஆண்கள் விழுந்தால் என்னாகும்---------->
ஆண்கள் விழாமல் இருக்க தலை கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் டமால்
Title: Re: ஆணினமே எச்சரிக்கை..!!!
Post by: Maran on April 04, 2014, 03:30:57 PM