FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 27, 2011, 08:35:39 PM
-
என் இசையே இன்னிசையே
என் மனம் எங்கும் வீசுகிறாய்
என் வரிகளின் பொருள் புரிந்தும் நீ
ஏன் மௌனமொழி பேசுகிறாய்
உள்ளதைத்தான் சொல்லுகிறேன் - அதில்
கள்ளம் என்ன காண்கிறாய் ?
உள்ளம் தனை கொள்ளை கொண்டும்
ஏன் இல்லை இல்லை என்கிறாய்
( என் இசையே இன்னிசையே )
இசையே நீ மட்டும் பேசிவிட்டால்
மொத்த குயில்களும் ஊமை ஆகும்
ஆசையை கொஞ்சி பேசிவிட்டால்
காதல்கிளிகள் வெட்கி சாகும்
இனி சொல்லவா ,சொல்லாமல் செல்லவா
என்னை அல்ல வா இல்லை புறம் தள்ள வா
உயிர் என்பதா ,கவிதை என்பதா
உன்னை உயிர் கவிதை என்பதா?
தேன் இசையே உன் பதிலை பெற
பல கவிதை தொடர்ந்து தொடுத்தேன்
மௌனத்தையே நீ பதிலாய் தந்தாய்
நான் மாற்று முடிவை எடுத்தேன்
இனி பாட்டுதான், பாடலின்கூட்டுதான்
உன் வாய் பூட்டுதான், இனி அதற்கு வேட்டுதான்
இனி மொட்டுதன் மலரும் பட்டு தான்
மலர வைக்கும் என் மெட்டு தான்
-
பாடுங்கள் தாள் திறக்கட்டும் ... உங்கள் தவம் பலிக்கட்டும் .... நல்ல கவிதை ஆசை ..
-
கவிதையா? ரோசா இப்படி கேலி பண்ணிருக்க வேண்டாம் !
அது ஒரு பாடல் , அதற்கு வைர வரிகளை எடுத்து என் வெண்கல வரிகளை பதிசுருக்க்கேன் அவ்வளவு தான்
-
Nalla iruku..
cute one
-
ஆசை கவிதைதானே பாடலாக உரு பெற்றுள்ளது ...எனவே கவிதை சிறப்பு என்றால் பாடலும் சிறப்புதான் .
-
கவிதை பாடி அலுத்து போனதோ
மெட்டெடுத்து பாட்டு பாடி
கவிஞனின் தேடல்
முற்று பெறுமோ??
கவிதை என நினைத்து
படித்தேன்
பாடல் கூட கவிதையாய்
தெரிகிறது...
நன்று
-
அலுத்தும் போகவில்லை , வெளுத்தும் போகவில்லை
ஆசையின் ஓர் ஆசை , ஒரு வகையில் பேராசை
இழுத்துகொண்டே புழுத்துபோய் அலுத்துபோயிவிடகூடாதே
வரமொன்றை பேரவேண்டி (கவிதைவழி ) தவமிருந்தேன்
தவத்தின் தரம்தன்னில் தரமில்லை என்றோ ?
வரம் தரவில்லை சுரத்திற்கு சொந்தக்காரி
தவநிலை மாறினால் வரம் பெறக்கூடுமோ ? என்றே
தவநிலை மாற்றினேன் (பாட்டிற்கு மாற்றம் ) வரம் பெற.
பாடல் பழையதெனும் காரணத்தாலோ புரியவில்லை எவர்க்கும் ?
அடுத்தமுறை புதியதொரு பாடல் பதிவுபெற்று இதயம் ஈர்க்கும் !
-
மௌனமொழியின்
அர்த்தம் புரிந்துவிடின்
என் மௌனத்திற்கு
அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ??
கவிதையில் உயிர்
உன் உயிரில் கவிதை
மாறுபாடு இல்லை
தமிழை நேசிக்கும்
உன் மேல் நேசம் கொள்ள
தமிழும் அதிர்ஷ்டம்
செய்து இருக்கவேண்டுமே ;) ;) ;)
-
padal varigalin maatram arumai..
thodaralamey ithu pondra varimaatraththi ...???
-
nitchayam thodarum !
veguviraivil edhirpaarkkalaam !
nandri !!!