FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 31, 2014, 04:58:37 PM

Title: ~ பொன்மொழிகள்... ~
Post by: MysteRy on March 31, 2014, 04:58:37 PM
பொன்மொழிகள்...

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10013059_586142831483180_1560434217_n.jpg)


1. உழைப்பின் சக்தியே உலகில் மிகமிக உன்னதமானது. - லிங்கன்

2. பார்வையற்றவன் குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன். - காந்தியடிகள்

3. உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. - விவேகானந்தர்

4. உழைப்பு மூன்று தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது: தொந்தரவு, தீய ஒழுக்கம், வறுமை. - வால்டேர்

5. மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்.- ராபர்ட் கோலியர்

6. ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான் உள்ளத் தூய்மையைக் காட்டும் வழி. - அலெக்ஸôண்டர் போப்

7. நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பு. - பெர்னார்ட்ஷா

8. அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக் கொள்வது நாம். ஆனால் அதை விதி எனச் சொல்கிறோம். - ஆல்ராய்