FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 31, 2014, 04:57:00 PM

Title: ~ பீவர் அல்லது நீரெலிகள் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on March 31, 2014, 04:57:00 PM
பீவர் அல்லது நீரெலிகள் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1888547_586619868102143_1398312655_n.jpg)


பீவர் அல்லது நீரெலி என்பது ஒரு அரை-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும்ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.

பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய கொறியுயிர் இதுவேயாகும். பீவர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் பீவர்கள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத ஒரு தன்மையாகும்.