FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on March 28, 2014, 10:45:54 PM
-
மாட்டேன் நான்
சாக மாட்டேன் .......
சாக வேண்டியவர்களும்
சாகடிக்கப்பட வேண்டியவர்களும்
சாவுக்கு முன்னே பிணமாக வாழ்பவர்களும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க
நான் என் சாக வேண்டும்
என்றாலும் சில சமயம்
செத்துப் போகலாம் என்று
மனம் கசந்து தான் போகிறது
வீட்டுக்கு சுமையாய்
ஊருக்குப் பாரமாய்
உலகுக்குப் பூஜியமாய்
மனதுக்கு சூனியமாய்
இருந்தென்ன பயனென
சலிப்பு பிறந்து விடுகிறது
எங்கிருந்தென்று தெரியாமல்
எப்படி வந்ததென புரியாமல்
ஏனென்று விளங்காமல் .........
இருந்தாலும் ........
வீணாய் சாவதில்
என்ன இருக்கிறது என்ற யோசனை
அதையெல்லாம் அமுக்கி விட்டு
பிழைத்துக் கொள்கிறது
சாவுக்கும் வாழ்வுக்கும்மிடையில்
இந்த ஊசலாட்டம்
நரக வேதனை தான்
இதற்காகவே செத்துத் தொலையலாம்
என்றாலும்........
என்னவோ ஒன்று
தாக்குப் பிடித்து
தாங்கி கொண்ண்டுதான் வருகிறது
அது ஏதேன்றும் என்கிருக்கிறதேன்றும்
ஒன்றும் புரியவில்லை
அதனால் .......
செத்துப் போவதிலும்
சாகாமல் இருப்பதே
செளகரியமாக இருக்கிறது
உங்களுக்கும் அப்படித்தானே
ஆகவே .....
சாகதிருக்க முடிவெடுத்தேன்
செத்துப் போகும் வரை
-
செத்துப் போவதிலும்
சாகாமல் இருப்பதே
செளகரியமாக இருக்கிறது
உங்களுக்கும் அப்படித்தானே ----------> domal yara kekringnu sollave ila 8)
-
ஆகவே .....
சாகதிருக்க முடிவெடுத்தேன்
செத்துப் போகும் வரை
wow :D intha line nalaarku somali.. un kavidia ku me adimai :)