FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 28, 2014, 09:13:15 PM

Title: ~ பாக்கு மற்றும் புகையிலையால் வரும் வாய் புற்றுநோய் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on March 28, 2014, 09:13:15 PM
பாக்கு மற்றும் புகையிலையால் வரும் வாய் புற்றுநோய் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-9/1975021_708055592550092_876976696_n.jpg)


வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்.

சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இப்படிப்பட்ட கடினப்பட்ட வாய் உள் தசை நார்களில் புற்று நோய் உருவாகிறது. அது மிகக் குறுகிய காலத்தில் வாய் புற்று நோயாக ஆகி, பேச்சுக்கும் பிறகு உயிருக்கும் உலை வைத்து விடுகிறது. இந்த வாய் புற்று நோயை ஆங்கிலத்தில் ஓரல் சப்மியூக்கஸ் ஃபைரோசிஸ் (Oral Sub mucous fibrosis - OSF) என்று கூறுகின்றனர்.

வெற்றிலை பாக்கு போடுவோரில் நாள் முழுவதும் அதனை குதப்பிக்கொண்டிருப்பவர்களைத் தவிர, அது பெரிதாக யாரையும் பாதிப்பதில்லை. ஆனால், பான் பராக் போன்ற புகையிலையுடன் கலந்த பாக்கை குதப்புபவர்களுக்கு நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

இதய நோய் அல்லது நுரையீரல் நோய்கள் குறிப்பிட்ட சில மரபணுக் கூறுகளைக் கொண்டவர்களை அதிகமாகப் பாதிக்கிறதோ, அதேபோல், இதற்கும் மரபணுக் கூறுகள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மரபணுக் கூறு எதுவாக இருப்பினும், வாய் புற்று நோய்க்கு வித்திடும் பாக்கு போடும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு சுயிகம் கொடுப்பது, அதனை பொழுதிற்கும் அவர்கள் குதப்பிக்கொண்டிருக்க அனுமதிப்பது போன்ற பழக்கங்களை பெற்றோர்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும்.

இளையோர், இந்த பழக்கத்திற்கு ஆளாகிய சில நாட்களில் அவர்களின் செயல்பாட்டில் ஒரு சுணக்கம் ஏற்படுவது மட்டுமின்றி, நேர்த்தியான சிந்தனைத் திறனும் பாதிக்கப்படுகிறது.