FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 26, 2014, 07:34:22 PM

Title: ~ உணவு செரிமானப் பணி:- ~
Post by: MysteRy on March 26, 2014, 07:34:22 PM
உணவு செரிமானப் பணி:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1557516_707351679287150_80470663_n.jpg)


உணவு உண்டதும், உணவு செரிமானப் பணி துவங்குகிறது. உணவுகளை செரிக்கும் போது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சுரக்கின்றன. இவை மிகவும் சக்தி வாய்ந்த அமிலங்களாகும்.

சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பாட்டுக்கு நடுவேயும் தண்ணீர் குடிப்பதால் இந்த அமிலங்கள் சுரப்பதில் தாமதம் ஏற்படும். அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

பொதுவாக இரைப் பையைச் சூழ்ந்துள்ள சளிச்சவ்வு, இந்த சக்தி வாய்ந்த அமிலங்கள் இரைப்பைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் பாதுகாக்கின்றன.

ஆனால் மசாலா அல்லது அதிகமான கார உணவு, புகையிலையை உண்ணும்போது இந்த அமிலங்கள் அதிகமாக சுரந்து, இரைப்பை சுவர்கள் மற்றும் திசுக்களை புண்ணாக்குகின்றன.

இதைத் தான் அல்சர் என்று அழைக்கிறோம்.