FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on March 26, 2014, 01:26:58 PM
-
தள்ளியிருந்து அவள் கண்பார்க்க
காத்திருந்த கணங்கள் அழகு…
புறமிருந்து அவள் நிழல்தீண்ட
நடையிட்ட தினங்கள் அழகு..
திடங்கொண்டு அவள்முகங்கண்டு
நகைமுயன்றிட்ட நொடிகள் அழகு..
அடங்கொண்டு அவள்தடந்தின்று
எனைத்தொலைத்த யுகங்களழகு..
திங்கள் கடிதுநடையிட
நானவளுடன் நாவுரைத்த நேரமழகு,
பெண்கள் விசும்பித்தீர்த்திட
யாமிருந்த காந்தர்வப் பொழுதழகு..
அன்று தொட்டு
வளியழகு,
நிலவழகு,
வாய்க்கால் குழியழகு,
வாய் பேசும் மொழியழகு,
எனக்காய் அவள் நின்ற நொடியழகு,
அவளோ குன்றிடாத வடிவழகு,
மருண்ட மயிலவள் என்
தோள்சாய்ந்த விதமழகு,
பிதற்றி தள்ளிய வரி சுவைத்து
என்கவி வளர்த்த அவள் பேரழகு
அவள்க்காய் நேர்ந்திருந்த காலங்களழகு,
அவள் விரல் பற்றி ரசித்திட்ட முகிலழகு,
அவள் சூட்டிய பூவழகு,
பூவீந்த தேனழகு,
தேன் குடித்த வண்டழகு,
வண்டிசைத்த ஸ்வரமழகு,
அவளோடிருந்த யுகமழகு,
அவள் நினைவோடு உறவாடும் கனவழகு,
ஈரில்லா சுகமளித்த இந்த காதலுமோரழகு,
இன்றவளின்றி இம்சிக்கும் அதே காதல் பேரழகு..
-
வார்த்தைகளில் இல்லாத சப்தங்கள் கவிதையாக ...
நிறைவான கவிதை!...
-
Nanri maran :-)
-
சசி வார்த்தை தேடறேன் உங்க கவிதை அவளவு அழகு நீங்க வர்ணிச்ச பெண்ணை விட..
-
Ha ha. . :-) Nandri pinky :-)