FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on March 25, 2014, 02:18:47 PM

Title: பெண்களின் காதல்
Post by: PiNkY on March 25, 2014, 02:18:47 PM

பெண்களின் காதல்
ஆண்களின் காதலை விட
அழகு....

அவன் கைகோர்த்து நடக்க
மடிசாய்ந்து உறங்க
தோள் சாய்ந்து அமர
மனம் திறந்து பேச
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்
அவன் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து
அவனை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகு
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய
அவனுக்கு பிறகு அவனை
பேசி பேசியே கொல்லும் போது
பெண்களின் காதல் அழகு...

தங்கம் வைரம் அம்மு செல்லம்
என்று குழந்தையென கொஞ்ச
சொல்லி
கெஞ்சும் போதும் பின்னர்
அவனை செல்லமாய்
குழந்தையாய் கொஞ்சும் போது
பெண்களின் காதல் அழகு...

தலைவலியென சிறிய பொய்
சொன்னாலும் நம்பி
கண்ணீர் சிந்தி அவனை
காதல் மழையில் நனைய
வைக்கும்போது
பெண்களின் காதல் அழகு...

ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு அவனை
தவிக்கவிடும்போது
பெண்களின் காதல் அழகு...

யாரேனும் அவனை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
பின்னர் அவனை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல் அழகு.....

யார்கூடவும்
பகிர்ந்து கொள்ளமுடியாத
விசயங்களை அவனோடு மட்டும்
பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகு....

அவன் முதல்
முறை காதலை சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் அவனை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின் காதல்
அழகு....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எறியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எறியும் போதும் பெண்களின் காதல்
அழகு
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க
படுவது பெண்கள்தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும்
ஆனால் பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும்
வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்....
‪#‎காதலன்‬ ஒருவன்
‪#‎கணவன்‬ ஒருவன்
நரக வாழ்க்கை..

பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு




     .. :) படித்ததில் பிடித்தது
Title: Re: பெண்களின் காதல்
Post by: sasikumarkpm on March 26, 2014, 01:19:14 PM
நல்ல வரிகள்.. :) ஆனாலும், காதல் பாலின பிரிவுகளுக்கு அப்பாற்பட்டதுங்க.. ஆண், பெண் யாராக இருந்தாலும் அவங்களுக்குள்ள இருக்க காதல் பிரித்துப் பார்க்க முடியாத படி அழகானதுங்க..  :)
Title: Re: பெண்களின் காதல்
Post by: தமிழன் on March 29, 2014, 11:31:18 AM
பொண்ணுங்க இப்படி சொல்லி சொல்லியே காலத்த கொண்டு போறாங்க இதையே ஆண் என்று வைத்து எழுதிப்பாருங்க அப்பவும் சரியாய் தான் இருக்கும். சரி சரி சண்டைக்கு வராத 
Title: Re: பெண்களின் காதல்
Post by: NasRiYa on April 02, 2014, 07:48:37 PM
இத்தனை அனுபவமா பாப்ஸ் ஹ ஹா  :D :D :D
Title: Re: பெண்களின் காதல்
Post by: PiNkY on April 03, 2014, 10:50:33 PM
Oi somali no no vidamatn unku adip pen :@ odidu thapichu.

Nalz :-* thnks da..

Sasi thnks
Title: Re: பெண்களின் காதல்
Post by: Maran on April 04, 2014, 04:03:51 PM


வரிகளில் சுகம் இழைந்தோடுகிறது..

அருமை தோழி....!