FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 27, 2011, 04:21:33 AM
-
எனது ஹைக்கூ
பகைஞன் வீட்டு
மரமல்லி வாசம்
மூக்கை துளைத்தது.
பறையை அடித்துக்
கிழித்தான்
செவிடன்.
காற்றில் ஆடிய திரைச்சீலை
உள்ளிருந்த எதையும்
மறைக்கவேயில்லை.
மேகம் வரைந்த
ஓவியங்களை
கலைத்துசென்றது காற்று.
தாய்பசுவும் கன்றுக்குட்டியும்
ஒன்றையொன்று
'அம்மா' என்றது.
சீருடையணிந்தவன்
மாணாக்கன்
சீருடையணியாதவர் வாத்தியார்
padithathil asithathu ;)
-
// தாய்பசுவும் கன்றுக்குட்டியும்
ஒன்றையொன்று
'அம்மா' என்றது.//
நானும் ரசித்தேன்
பகிர்வுக்கு நன்றி