FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 27, 2011, 04:16:57 AM
-
நிலம் வாங்கினால் ....இலவசம்!!!
ஏப்ரல் மாதம் தொடங்கினாலே வெயல் கொளுத்த ஆரம்பித்து அக்டோபர் மாதம் வரை வறுத்து எடுத்து மனிதர்களையும் மரம் செடி புல் பூண்டு ஆறு குளம் ஏறி கிணறு எல்லாவற்றையும் இல்லாமல் செய்து விட்டு மனிதர்களின் ஏகோபித்த 'தண்ணீர் பற்றாக்குறைக்கு' திரைகதை வசனம், எழுதி அரங்கேற்றிவிட்டு வேடிக்கை பார்க்கும். தங்கம் விலையும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதை விட நிலத்தின் விலை அசுர வேகத்தில் ஏறி இருப்பது கூட வெயலின் கொடுமை போலத்தான் சுட்டெரித்து வருகிறது.
சில தனியார் தொலைகாட்சிகளில் மனை ஒன்று வாங்கினால் ஏகப்பட்ட பரிசு பொருட்களை தருவதாகவும், தங்க காசு தருவதாகவும், இலவசமாக பத்திரம் பதிவு செய்து தருவதாகவும் விளம்பரங்கள் வருவது வாடிக்கையாகி உள்ளது. குறைந்த விலைக்கு மனைகளை விற்பனை செய்பவரால் எப்படி இத்தனை இலவச பொருட்களை கொடுக்க இயலும் என்பதும் இலவசமாக பத்திர பதிவு செய்யப்படும் என்பதையும் பார்க்கும் போது யோசிக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்வதாகவே உள்ளது.
காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி சொன்னது போல காணி நிலம் என்பது தற்காலத்தில் கையளவு நிலம் என்னும் நிலையில் சுருங்கிவிட்டது. கனவு இல்லம் என்ற ஒன்று இருந்துவிட்டாலே கனவு நிறைவேறுவதற்கு முயற்சி செய்வதைவிட இருப்பதை கவனமுடன் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மிகுந்து வருகிறது. விளம்பரத்தை பார்க்கும் ஒருவர் நிச்சயம் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடக்கூடிய அபாயம் நிறைந்தே காணப்படுகிறது, சற்று இளகும் மனதுடையவராக இருந்தால் தொல்லைதான் மிஞ்சும்.
நாட்டில் நடக்கும் தில்லு முல்லுகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதால் ஒருவர் ஏமாற்றிய அதே பாணியில் அடுத்தவர் ஏமாற்றுவதற்கு திட்டம் வகுப்பதில்லை, இதனால் மக்கள் எத்தனைதான் விழிப்போடு செயல் பட்டாலும் முற்றிலும் புதிய பாணியை உருவாக்கி ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்துவிடுகின்றனர். கொள்ளை அடித்துவிட்டு தப்பித்த பின்னர்தான் அவர் கொள்ளையடித்த கதை செய்தியாகி வெளிவருகிறது.
கொள்ளையடிப்பவர்கள் அவர்களது அறிவை உழைத்து சம்பாதிப்பதற்கு பயன்படுத்துவதை காட்டிலும் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவும் மோசம் போக்கவுமே சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
-
இலவசம் என்று சொன்னாலே அங்கு ஏதாவது ஒரு வகையில் மக்கள் ஏமாற்றப்படுவார்கள்
என்பது உண்மை இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்