FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 21, 2014, 09:28:33 PM

Title: ~ வரிக்குதிரைகள் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on March 21, 2014, 09:28:33 PM
வரிக்குதிரைகள் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1148752_582287661868697_1652940310_n.jpg)


வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில்வரிக்குதிரைகள் எனப்படுகின்றன. வரிக்குதிரைகள் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.

வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித்தன்மையான கருப்பு-வெள்ளை வரிக்கோடுகள் கொண்டவை. வரிகள் முன்புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.