FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 19, 2014, 12:01:15 PM

Title: ~ பொது அறிவு:- ~
Post by: MysteRy on March 19, 2014, 12:01:15 PM
பொது அறிவு:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/1969287_581104641986999_1424255375_n.jpg)


நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?
அகப்பொருள்

மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்

முற்றியலுகரத்தில் முடியும் எண்?
7

பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?
முல்லைப் பாட்டு

”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?
உவமையணி

”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?
திருமூலர்

”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை

”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்

நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்

வெண்பா எத்தனை வகைப்படும்?
5

அடியின் வகை?
5