FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 18, 2014, 05:32:17 PM
-
உன்னுள் என் நினைவு
இருந்தாலும் இல்லாதுபோனாலும்
சமுதாய சம்பிரதாயப்படி
சர்வசாதாரணமாய் இயங்கிடும்
சராசரி இதயமில்லையடி .
நீயில்லா நாட்களில்
கடும் சங்கடத்தோடு
சராசரியைகாட்டிலும் சற்றும்
கூடுதல் சங்கடத்துடன் துடிக்கும்
உனக்கான சிறப்பு இருப்பிடம்
என் காதல் இதயம் .