FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 27, 2011, 03:53:08 AM

Title: ஒன்றிருக்க ஒன்று வந்தால்....
Post by: Global Angel on November 27, 2011, 03:53:08 AM
ஒன்றிருக்க ஒன்று வந்தால்....  


பூவரசியின் பெயர் இரண்டு வாரமாக செய்திகளையும் பொதுமக்களின் பேச்சுக்களிலும் பேசப்பட்ட செய்தி, செய்தியின் அடிப்படை புதியது இல்லை என்றாலும், சரிகாஷாவின் மரணத்தைப் போல சிறுவன் ஆதித்யாவின் மரணமும் மிகவும் கொடூரமானதும் வேதனையை ஏற்ப்படுத்துவதுமாக இருந்ததுதான் இந்த பரபரபிற்கு காரணம். பூவரசியின் தரப்பிலும் ஜெயக்குமாரின் தரப்பிலும் சமமான தவறுகளும் குற்றங்களும் காரணங்களாக முன்வைக்கபட்டாலும் பூவரசியின் கோபம் மன உளைச்சலை ஏற்படுத்த கொடூரகொலை செய்யும் அளவிற்கு அவளை தூண்டியது ஜெயக்குமாரின் மனிதாபிமானமற்ற செய்கைகள். பூவரசியின் படிப்பு மற்றும் அவரது குடும்பச்சூழலை கவனித்துப் பார்க்கும்போது, அவருக்கு தகுந்த அறிவுரை வழங்க அல்லது தவறுகள் செய்யவிடாமல் தடுக்க யாரும் இருப்பதாக தெரியவில்லை.

தற்கொலை கொலை இரண்டுமே உணர்வுகளின் அடிப்படையை மையமாக கொண்டு செயல்படுத்தபடுவதால், இவற்றை நியாயப்படுத்துவதோ குற்றம் செய்தவரை இழிவாக எண்ணுவதோ சரியானதாக இருக்காது, சட்டத்தின் முன் பூவரசி குற்றவாளியாக இருந்தாலும், அவரது வேதனைகள், தோல்விகளின் அடிப்படையில், குழம்பியிருந்த மனநிலையில் சரியான முடிவெடுக்க இயலாமல் போனதால் பழிக்குப் பழி என்கின்ற எண்ணம் தோன்றி அவரை கொலை செய்ய தூண்டி உள்ளது. துவக்கத்திலேயே இந்த தவறான உறவை தவிர்க்கவில்லை என்றால் முடிவுகள் சோகத்தை ஏற்ப்படுத்துவது இயல்புதானே. தவறான உறவுகளால் பல குற்றங்களும் கொலைகளும் செய்திகளாக மாறுவதை நாம் கவனித்தாலும், இனியொரு தவறு நடக்காமல் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறான உறவுகளும் அதனால் ஏற்ப்படும் கொலைகளும் குற்றமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

கட்டுபாடற்ற வாழ்க்கை முறை, எப்படி வேண்டுமானாலும் இன்பம் அனுபவிக்க தயங்காத வாழ்க்கை, 'திருட்டுத் தண்ணீர் தித்திக்கும்' என்கின்ற இழிவான எண்ணம், முடிவு, மாறாத துயரம். காலம் கடந்த நிலையில் திருந்த நினைக்கும்மனம். 'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை'.
Title: Re: ஒன்றிருக்க ஒன்று வந்தால்....
Post by: RemO on November 27, 2011, 04:52:48 PM
//கட்டுபாடற்ற வாழ்க்கை முறை, எப்படி வேண்டுமானாலும் இன்பம் அனுபவிக்க தயங்காத வாழ்க்கை, 'திருட்டுத் தண்ணீர் தித்திக்கும்' என்கின்ற இழிவான எண்ணம், முடிவு, மாறாத துயரம். காலம் கடந்த நிலையில் திருந்த நினைக்கும்மனம். 'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை'.//

தவறு செய்த தந்தைக்கு தண்டனையாக குழந்தை கொலை