FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on November 26, 2011, 07:58:09 PM

Title: சென்னைதமிழில் இசை தமிழுக்கு அர்ப்பணம்
Post by: aasaiajiith on November 26, 2011, 07:58:09 PM
செந்தமிழுக்குதான் செம்மொழி சிறப்பை சென்றடைய செய்துட்டாரே செம்மொழி நாயகர்
இருந்தும் செந்தமிழையே செம்மை செய்வது செழுமையா?
என சென்னை தமிழ் தன்னையும் சான்றோர் சீராட்ட செய்வாயானு சோகமா சொன்னது .
சோ  சென்னைதமிழை சோக்கு செய்றதுக்காண்டி சொம்மனாகாட்டியும்  ஒரு சோதனை முயற்சி ..
பட்சிட்டு  சோக்கா  இர்ந்தா சோக்கு மாமுனு சொல்லு , சோமாறா இர்ந்தா சோமாறி , சோம்பேறினுலாம் சொல்லாம சோமாறு மாமுன்னு சொல்லணும் சர்தானா?
 
எயற்கை அய்கை பாக்க சொல்லோ -  மன்சுல
ஓன் அய்கு கவித நெனிப்புவரும்
ஓன் நெனிப்பு மட்டும் இர்ந்துச்சுன்னா - அப்பாலிக்கா
கசக்கும், பாவக்காலேர்ந்தும் இனிப்புவரும்
எப்பயும் பூவு அல்லாம் பாக்க சொல்லோ - மன்சுல
ஓன் அய்கு மொவத்தை பாக்க ஆசைவரும்
ஓன் கொரலு ஒர்தபா கேட்டு பயகிபுட்டா - கோட்டான்
வாயிலேருந்து இருந்தும்கூட குயிலு ஓசைவரும்
ஓன்னை நெனிசுக்குன்னே ஊட்ல நாஷ்டா செஞ்சேன் - மையாலுமே
இட்டிலி சுட்டாக்கா தோசைவரும்
நான் இஷ்டபட்ராப்ள நீயும் இஷட்ப்பட்டு என்னை நேநிச்சி - இத்தை
பட்சாகா உனுக்கும் சோக்கா மெட்ராஸ் தமிளு பாசை(ஷை) வரும்
Title: Re: சென்னைதமிழில் இசை தமிழுக்கு அர்ப்பணம்
Post by: Global Angel on November 26, 2011, 08:15:07 PM
இந்தா மெய்யாலுமே சோக்கா கீது .... டக்கரகீது ... அடுத்த தப இன்டலி வேனுன்னாக்க  தோசை ஒத்திக்க .... இன்ன நான் சொல்றது ...
அசித்து... இத பட்ச்சா என் தமிழு ... தா பாரு பிச்சுகினுபோவுது ....


நல்ல கவிதை எந்த தமிழில் சொன்னாலும் கவிதை இனிமையானது .. அதிலும் காதல் ரொம்பவே இனிமையானது .....  நன்றி அஜித் .
Title: Re: சென்னைதமிழில் இசை தமிழுக்கு அர்ப்பணம்
Post by: ஸ்ருதி on November 26, 2011, 11:21:37 PM
Enaku onume vilangala :(
Title: Re: சென்னைதமிழில் இசை தமிழுக்கு அர்ப்பணம்
Post by: RemO on November 27, 2011, 12:00:22 AM
super ajith

chennai tamila irunthalum tamil alagu than
kavithai nalaruku
Title: Re: சென்னைதமிழில் இசை தமிழுக்கு அர்ப்பணம்
Post by: ஸ்ருதி on December 01, 2011, 12:46:56 PM
தாமதமாய்
பலமுறை படித்த பின்
விளங்கியது இந்த என்னை தமிழ்  ;) ;)