FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 17, 2014, 10:38:46 AM
-
"வல்லாரைக் கீரை சாதம்"
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F04%2Fmgmmjj%2Fimages%2Fp60c.jpg&hash=b0c7690a85092b127a3121dee3149d4dd625f0c0)
''என் வீட்டில் எல்லா கீரைகளையும் பயன்படுத்தி, கலந்த சாதமாகச் செய்வேன். சமையலில் என் பாலிசி என்ன தெரியுமா? 'சுவையோடு, சமையல் சத்து நிறைஞ்சதா இருக்கணும்' என்பதுதான். பிள்ளைங்களுக்குத் தேர்வுக் காலம் நெருங்கிட்டிருக்கு. வல்லாரைக் கீரை சாதம் செஞ்சு கொடுங்க. ஆல் பாஸ்தான்!'' என்று ஆலோசனை தரும் சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த பூங்குழலி நித்யகுமார், அதன் செய்முறை விளக்கத்தையும் சொன்னார்.
வல்லாரைக் கீரை சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F04%2Fmgmmjj%2Fimages%2Fp60b.jpg&hash=61c891eb8c1cd5f493291c33023ae4e4a909d342)
தேவையானவை:
உதிரியாக வடித்த சாதம் - 4 கப், வல்லாரைக் கீரை - 2 கப், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு _ தேவையான அளவு, நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்.
செய்முறை:
கீரை காம்பைக் கிள்ளி, நன்றாக அலசவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய், இஞ்சி, கீரையை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். வறுத்த பருப்பு மற்றும் வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு, மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, கீரை விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து பிசிறவும். வல்லாரை ரைஸ் ரெடி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F04%2Fmgmmjj%2Fimages%2Fp53.jpg&hash=e01e61d6ec7882c1ffaac362d37b979fb17220ac)
சரவணன், சித்த மருத்துவர்:
வல்லாரைக் கீரையே மூளை வடிவத்தில் இருப்பதுதான் இயற்கையின் அதிசயம். இது, மூளை மற்றும் நரம்புகளுக்கு மிகவும் நல்லது. ஞாபகசக்தியைத் தூண்டும். உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குழந்தைகளுக்கு வரும் கணைய நோயைச் சரி செய்யும். வல்லாரையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால், சருமப் பாதிப்பைத் தடுக்கும்.