FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 26, 2011, 03:44:30 PM
-
அழகாய் மழை
குளிராய்க் காற்று
வாகன சத்தமில்லா
முழுஅமைதி
குயில்களின் கூவல்
எங்கோ அழும்
குழந்தையின் அழுகை
குளிரில் நடுங்கி
சன்னலருகே
கொஞ்சும் புறாக் கூட்டம்
அங்கங்கே ஒலிக்கும்
கைபேசியின் இசை ஒலி
நடுநடுவே இடியின் ஆதிக்கம்
மின்னலின் ஒளிப்படம்
எல்லாமே அழகாய் இன்று
கண்ணாடிக் கூட்டுகள்
கைகள் கணினியில்
தட்டிக் கொண்டு இருக்க
அலுவல் அவசரத்தில்
ரசிக்க மறந்தேனோ
இயந்திரத்தை இயக்கும்
இயந்திரமாய்
இயந்திர வாழ்க்கையில்
சில யதார்த்தங்களை
ரசிக்க மறந்தேனோ
அலுவல் தரும் அலுப்பில்
இரைச்சலாய் தோன்றிய
அத்தனை சத்தமும்
இன்று ரீங்காரமாய் ஒலிக்க
அமைதியாய் மனம்
நிம்மதியான சூழல்
வேண்டும் தினமும்
ஏக்கத்தோடு மீண்டும்
இயந்திர வாழ்க்கை தொடர
அலுவலத்திலிருந்து அழைப்பு :'( :'(
-
உண்மைதான் நமக்கு அமைதியான சூழல் கிடைத்தால்தான் எதையும் ரசிக்க முடியும் ... அதிலும் அலுவலகம்னா .... சொல்லவே வேணாம்... பூனை கூட புலியா விகாரமாதான் தெரியும் அப்புறம் எங்க ரசிகுறது .... நல்ல கவிதை shuruthi
-
உண்மை தான் சுருதி
இயந்திர வாழ்கையில் நாம் பலவற்றை தொலைத்து நிற்கிறோம்
-
rரசிக்க மறந்தவை பல
அதில் சிலது தான் இது ;) ;)