FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 15, 2014, 08:05:35 PM

Title: ~ மனித உடலில் மணிக்கட்டில் (நீர் கட்டி ) ஏற்படும் கட்டிகள் பற்றிய தவல்கள்:- ~
Post by: MysteRy on March 15, 2014, 08:05:35 PM
மனித உடலில் மணிக்கட்டில் (நீர் கட்டி ) ஏற்படும் கட்டிகள் பற்றிய தவல்கள்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/10014672_702478149774503_478080770_n.jpg)


இத்தகைய கட்டிகள் ganglion என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். பொதுவாக இத்தகைய கட்டிகள் மணிக்கட்டின் பின் புறத்தில் தோன்றுவது அனால் சிலருக்கு முன் புறத்திலும் தோன்றலாம்.
சிலருக்கு கால்களின் மேல்புறத்திலும் தோன்றும், சிலருக்கு மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கனுக்காலடியிலும் தோன்றலாம்.
இது எவ்வகையிலும் அபாத்தான கட்டியல்ல . இது தோளுக்கு கிழே உள்ள தோலுடன் ஒட்டிக்கொண்டிருக்காது , வழுக்கிக் கொண்டிருக்கும், நீர் கட்டி (Cyst ) போன்றது அதற்குள்ளே நீரை விட சற்று தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்

எப்படி ஏற்படுகிறது :-
இத்தகைய ஜெலி போன்ற திரவம் தான் நமது மூட்டுகளையும் ,தசைநார்களையும் வரட்ச்சியடையாது வழவழப்புடன்
வைத்திருந்து சுலபமாக நம் உடலை இயக்க உதவுகிறது. எப்பொழுதாவது அடி படும் போது அல்லது தசைநாரை சுற்றிருக்கும் இத்திரவம் வெளியேறி எதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைபட்டு கட்டிபோல செருவதாலேயே எது ஏற்படுகிறது
கிழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் , அனால் இது புற்று நோய் போல வேற பாகங்களுக்கு பரவாது

சிகிச்சை:-
பொதுவாக சிகிச்சை ஏதும் தேவைபடாது, சில காலம் கழித்து சிலருக்கு தானாவே மறைந்திடும்

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத்திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிக தடிப்பான திரவமாவதால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடியாது

அவ்வாறு ஊசி மூலம் அகற்றி விட்டு அதனுள் ஸ்டிரொயிட் மருந்தை ஏற்றுவார்கள் இதனால் நீர்க்கட்டி மறைந்தாலும் சில காலம் கழித்து மீண்டும் வளரும்