FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 26, 2011, 11:23:22 AM

Title: இதற்கு பெயர் தான் வல்லரசா????
Post by: ஸ்ருதி on November 26, 2011, 11:23:22 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_36o10GMuE00%2FSXIm8a-RQqI%2FAAAAAAAAAuY%2FPtd-RDNZl1c%2Fs320%2Fbeggar.jpg&hash=1ac05419406d5ab40d8d5a7488c45be2a40eafa8)

இரு சக்கரவாகனத்தை
செலுத்தி கொண்டு
என் மனம் எதையோ சிந்தித்து..
எங்கு செல்கிறேன் என்று அடிக்கடி
என்னை நானே கேட்டுக்கொண்டு
பயணித்து கொண்டு இருந்தேன்

என் சிந்தனையின் வேகம்
என்னை மறக்க செய்ய
எதிரே வந்து போன
பல முகங்கள் மனதில்
பதிய மறுத்தது...
தெரிந்தவர்கள் எல்லாம்
மங்கலாய் கண்முன்னே..
எதையும் கவனிக்காமல்
என் பயணம்....

போக்குவரத்துக்கு அனுமதிக்காக
பச்சை விளக்கு வருமா என்ற
சிந்தனையோடு ஒரு இடத்தில
கம்பத்தையே பார்த்துக்கொண்டு இருக்க
என் சிந்தனைகள் எல்லாம்
கலைய செய்தது
ஒரு கைக்குழந்தையின் அழுகை....

எல்லா வாகனத்தையும் தட்டி
பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தால்
ஒருத்தி..
சுட்டெரிக்கும் வெயில்
கண்கள் குளமானது
பாலுக்காய் அழும் குழந்தை
அழும் குழந்தையை காட்டி
பிச்சை எடுக்கும் அவள்...

குழந்தையின் அழுகை
என் நெஞ்சை பிசைந்தது
கல் மனம் அவளுக்கு
பிள்ளை வரம் வேண்டி
பலபேர் இருக்க
பிச்சைகாரிக்கு
கடவுள் போட பிச்சை...
கடவுளுக்கு கண் இல்லை
உணர்ந்தேன் முழுமையாக...

சகிக்க முடியாத காட்சி
இன்னும் அகலவில்லை
என் விழித்திரையை விட்டு...

கோடி கோடியாய்
பிற நாடுகளுக்கு
நிவாரண நிதியாம்
தினமும் பத்திரிகைகளில்
தம்பட்டம் அடிக்கும் கட்சிகள்...
நிவாரணம் என்ற பெயரில்
நீ வாழ்கிறாய்...

சாலை வசதி
மருத்துவ வசதி
எதுவும் இல்லை
எம் நாட்டில்...

தெருவோர குடிசைகள்,
பிச்சைகாரர்கள், பைத்தியங்கள்
எல்லாம் வீதிகளில்
வாசம் செய்யும் நிலை
இதற்கு பெயர் தான்
வல்லரசா????

எதுவுமே செய்ய முடியாத
நிலை எங்களுக்கு...
வெறும் மௌனத்தை
மட்டுமே வெளிகாட்டி
கனத்த இதயத்தோடு
நகர்ந்துவந்தேன்
Title: Re: இதற்கு பெயர் தான் வல்லரசா????
Post by: Global Angel on November 26, 2011, 02:12:13 PM
நல்ல கவிதை ஸ்ருதி  வெறும் ஆயுத பலம் நம்மை வல்லரசு ஆக்க முடியாது .... எந்த ஒரு நாடு பசி பட்டினி இவற்றிலிருந்து எல்லாம் மக்களை காத்து மிளிர்கின்றதோ ... அதுதான் வல்லரசு ......  
Title: Re: இதற்கு பெயர் தான் வல்லரசா????
Post by: RemO on November 27, 2011, 12:31:54 AM
நல்ல கவிதை ஸ்ருதி  வெறும் ஆயுத பலம் நம்மை வல்லரசு ஆக்க முடியாது .... எந்த ஒரு நாடு பசி பட்டினி இவற்றிலிருந்து எல்லாம் மக்களை காத்து மிளிர்கின்றதோ ... அதுதான் வல்லரசு ......  

உண்மை தான் ஏஞ்செல்

சுருதி பிச்சை எடுக்கவே பலர் அழாத குழந்தையை கிள்ளி அழ வைப்பர்
அது அவர்களுக்கு பணம் ஈட்ட ஒரு வழி[/b]
Title: Re: இதற்கு பெயர் தான் வல்லரசா????
Post by: ஸ்ருதி on December 01, 2011, 12:45:08 PM
ம்ம் நிஜம் தான் ....வாடகைக்கு குழந்தை எடுத்து வந்தும் பிச்சை எடுப்பாங்க  :'( :'(