FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 14, 2014, 01:28:44 PM

Title: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:28:44 PM
பிரெட் க்ரிஸ்பிஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F1.jpg&hash=c87b11d379ad5c13c7df0bf8f6de4b0593bf6396)

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருஞ்சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு,  பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்து, தனியே வைக்கவும். பின்னர் வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி. அதில் அரை கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி, இறக்கவும்.
இது, லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:29:50 PM
வெஜ் சாண்ட்விச்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F2.jpg&hash=e249148c065379b3c61969e05706e5e9271a5e6a)

தேவையானவை:
சால்ட் பிரெட் ஸ்லைஸ் - 10, கேரட் துருவல், கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், வெங்காயம், குடமிளகாய், தக்காளி -  தலா ஒன்று, வெண்ணெய் - 100 கிராம், புதினா - சின்ன கட்டு (சுத்தம் செய்துகொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, இஞ்சி  விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். குடமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்,  வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை லேசாக வதக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடன் வெண்ணெய், இஞ்சி விழுது சேர்த்து நன்கு குழைத்து, பிரெட் துண்டின் மேல் பரவலாகத் தடவவும். அதன் மேல் வதக்கிய காய்களை பரவலாக வைத்து, மல்லித்தழைத் தூவி மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்யவும் (தவாவில் சூடுபடுத்தியும் தயார் செய்யலாம்).
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:31:06 PM
டொமேட்டோ  கார்ன் புலாவ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F3.jpg&hash=67a97c2d422b4262bc1a01dc20a3db29c44b5965)

தேவையானவை:
 பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த கார்ன் - அரை கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். அரிசியுடன் தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு அடுப்பை சிறிதாக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கவும். வேக வைத்த கார்னை மேலே தூவி... பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:32:15 PM
மினி வெஜ் ஊத்தப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F4.jpg&hash=0fd98cfc54f392e607f781bcf858e4f331523808)

தேவையானவை:
 இட்லி மாவு - 4 கப், கேரட் துருவல். கோஸ் துருவல் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், இட்லி மிளகாய்ப்பொடி, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி... கோஸ் துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் மாவை குட்டி குட்டி ஊத்தப்பமாக (சற்று தடிமனாக) ஊற்றி, மேலே இட்லி மிளகாய்ப்பொடி தூவி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக எடுக்கவும். சாஸ் உடன் பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:33:20 PM
பிரெட் வெஜ் ஆம்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F5.jpg&hash=7108a5e7694f62d5573f7cd53e1ddeef8f69aae2)

தேவையானவை:
 பிரெட் ஸ்லைஸ் - 10, கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) -  ஒரு கப், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, எண் ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு டன் வதக்கிய காய்கறி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங் கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:34:39 PM
மசாலா குஸ்கா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F6.jpg&hash=433d2291543ab9f0548e6228917b9baaf206604b)

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பால் - 2 கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்), பச்சை மிளகாய் - 3, புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், புதினா, கொத்த மல்லித் தழை ஆகியவற்றை வதக்கி...  மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து... அரைத்து வைத்த வெங்காயம் - தக்காளி விழுது மற்றும் இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசி, பால் சேர்த்து நன்கு கிளறி, தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும், 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து, 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.
இதற்கு, ஆனியன் ராய்தா மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் சூப்பர் காம்பினேஷன்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:35:49 PM
பனீர் ஃப்ரைடு ரைஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F7.jpg&hash=be13519378a3c487d30b5db47cff31f9738b12b5)

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், பனீர் - 100 கிராம், பூண்டு - காய்ந்த மிளகாய் அரைத்த விழுது - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். பனீரை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு - காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பாதியளவு வெங்காயத்தாள், பனீர் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பாசுமதி சாதம், மீதமுள்ள வெங்காயத்தாள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:37:33 PM
ஃப்ரூட் பகளாபாத்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F8.jpg&hash=e532fe61365454951202ee7a60a55773dce8d348)

தேவையானவை:
பச்சரிசி - 2 கப், பால் - அரை கப், புளிப்பில்லாத புதிய கெட்டித்தயிர் - இரண்டரை கப், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முந்திரி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், பச்சை திராட்சை - 20, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை நன்கு குழைய வேகவிடவும். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பால், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி ஆகியவற்றை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் கெட்டித்தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக, மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்து நன்கு கிளறவும். இதை டிபன் பாக்ஸில் போட்டு லஞ்சுக்கு கொடுத்து அனுப்பலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:38:51 PM
பச்சைப்பயறு பாத்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F9.jpg&hash=b5241cd5f1e46125c8199d47e7568e337d8f2d50)

தேவையானவை:
பச்சைப்பயறு, பச்சரிசி - தலா அரை கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி - 8, பட்டை - சிறு துண்டு, லவங்கம் - ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப்பயிறு, பச்சரிசியை நன்கு கழுவி 2 கப் நீர் ஊற்றி ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் ஊற வைத்த அரிசி - பயறை சேர்த்து குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். குக்கரைத் திறந்து 'பொலபொல’வென இருக்கும் மணக்கும் சாதத்தின் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள், முந்திரி தூவி, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, கிளறி இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:40:13 PM
க்ரீன் இட்லி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F10.jpg&hash=730b758fde513038ed491cda81af3b98ae486704)

தேவையானவை:
குட்டி இட்லி - 20 (அல்லது பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்) புதினா, கொத்தமல்லி - தலா ஒரு சிறு கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், புளி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லியை மண்போக அலசி, சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து... புதினா, கொத்தமல்லி, புளி, தேங்காய் துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஆறவைத்து, அரைத்துக் கொள்ளவும். நெய்யை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... அரைத்து வைத்த சட்னி, குட்டி இட்லிகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:41:33 PM
குயிக் வெஜ் புலாவ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F11.jpg&hash=e69396948c951f266e7bfb5ba47cf2b057ac93bb)

தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், பால் - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீள நீளமாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் நன்கு வதக்க வும். இதனுடன் பால், தண்ணீர் ஒரு கப், பாசுமதி அரிசி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடவும். பின்னர் நன்கு ஆவி வந்ததும் 'வெயிட்’ போட்டு, அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி.. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி, பரிமாறவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:43:01 PM
கார்ன் ஸ்டஃப்டு சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F12.jpg&hash=fdb7a19a8ab081b3f277c86253162247be1b0ca6)

தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்து உதிர்த்த சோளம் - ஒரு கப்,  பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), நெய், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை:
வேகவைத்து உதிர்த்த சோளத்தை மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் சிறிதளவு நெய், உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் பச்சை மிளகாய் - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி... அரைத்த சோளம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறிய தும் இந்த கலவையை சின்னச் சின்ன உருண்டைகளாக தயார் செய்யவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்து, இதனுள் கார்ன் விழுது உருண்டையை வைத்து மூடி, மெல் லிய சப்பாத்தியாக தேய்க்கவும். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் - நெய் கலவையை ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:44:31 PM
கலர்ஃபுல் சில்லி பரோட்டா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F13.jpg&hash=32bae3e51ffb10e70145416bfb54131186f1b38b)

தேவையானவை:
 பரோட்டா - 10, மைதா - அரை கப், சோள மாவு - முக்கால் கப், ஃபுட் கலர் (சிவப்பு) - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, குடமிளகாய் - ஒன்று, பூண்டு - 6 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். குடமிளகாயை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கி, வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.
மைதாவுடன், அரை கப் சோள மாவு, உப்பு, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். பரோட்டாக்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி... மிளகாய்த்தூள், பொரித்தெடுத்த பரோட்டா துண்டுகள் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள கால் கப் சோளமாவை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து பரோட்டா கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கவும். வதக்கி வைத்த குடமிளகாயை மேலே தூவவும்.
தயிர் பச்சடி, இதற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:46:06 PM
இட்லி மஞ்சூரியன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F14.jpg&hash=5d1e648c794f0153c0573ed82dfc60aa607705be)

தேவையானவை:
 இட்லி - 5 அல்லது 6 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு, கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:
கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கேசரி கலர், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இட்லித் துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கியெடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவவும்.
இதற்கு தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால்... சுவை அபாரமாக இருக்கும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:47:41 PM
சாஃப்ட் பரோட்டா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F15.jpg&hash=f954bbe8b24c02ea8ade2eea2deba0eb1eb9a724)

தேவையானவை:
மைதா மாவு - 2 கப், தயிர், பால் - தலா கால் கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவுடன் நெய், சர்க்கரை, உப்பு, சமையல் சோடா சேர்த்துப் பிசிறி, தயிர், பால் மற்றும் தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவில் ஒரு உருண்டை எடுத்து மெல்லியதாக, வட்டமாக திரட்டி அதன் மீது பரவலாக எண்ணெய் தடவி மடித்து சுருட்டவும் (புடவை கொசுவம் போல). பிறகு, சப்பாத்தி குழவியால் சற்று கனமாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இதேபோல 4, 5 பரோட்டாக்களை சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இரண்டு கைகளாலும் இரண்டு ஓரங்களிலும் சேர்த்துத் தட்டி எடுத்து வைக்கவும்.
வெஜ் குருமா இதற்கு சரியான ஜோடி.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:49:04 PM
பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F16.jpg&hash=8663ef221e9a676f71b322903d4e5a36017fe357)

தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், பச்சைப் பட்டாணி - ஒரு கப் (வேகவைத்து நீரை வடிக்கவும்), கொத்த மல்லித் தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, நெய் - எண்ணெய் கலவை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவுடன் சிறி தளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும், வேகவைத்த பச்சை பட்டாணியுடன் கொத்தமல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து. சின்னச் சின்ன உருண்டைகள் தயார் செய்யவும்.
பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல் செய்யவும். அதனுள் பட்டாணி விழுது உருண்டையை வைத்து மூடி (வெளியே விழுது வராதபடி) சப்பாத்தி களாக தேய்க்கவும்.  தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் நெய் - எண்ணெய் கலவையை ஊற்றி, இரு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தியை அப்படியே சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்து அனுப்பலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:50:33 PM
ஓட்ஸ்  கேழ்வரகு ரொட்டி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F17.jpg&hash=abd7b7c517dfb45157b86e94cbf2bc264b1834dc)

தேவையானவை:
ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கேழ்வரகு மாவு, ஓட்ஸுடன் நெய்யைத் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு பிசையவும். கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன்மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும். தோசைக்கல்லின் மீது நெய் தடவி, ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்கு, ஃப்ரூட் ஜாம் பெஸ்ட் காம்பினேஷன்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:51:58 PM
பச்சைப்பயறு கட்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F18.jpg&hash=85a23a951331dfbd425e6ff4537040b7cf5fd8c0)

தேவையானவை:
உருளைக்கிழங்கு - ஒன்று, முளைகட்டிய பச்சைப்பயறு - கால் கப், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கி, வேகவைத்த கேரட், பீன்ஸ், கோஸ் (மூன்றும் சேர்த்து) - ஒரு கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முளைகட்டிய பச்சைப்பயறை சேர்த்து வதக்கவும். பிறகு, பயறுடன் வேகவைத்த காய்கறிகள், பச்சைப் பட்டாணி, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், கொத்த மல்லித் தழை, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி... தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கட்லெட்டுகளைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, சாட் மசாலாவை லேசாகத் தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:53:52 PM
ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F19.jpg&hash=8018e7c1147d7b2bdd83827bf56635d92b7c4e2a)

தேவையானவை:
கடலை மாவு - 2 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கடலை மாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கட்டியில்லாமல் கரைக்கவும். சமையல் சோடா மாவில் வெதுவெதுப்பான நீர் விட்டுக் கரைத்து அதை கடலை மாவுக் கரைசலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
இட்லித்தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போட்டு ஆறவிடவும். இதுதான் டோக்ளா. சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, டோக்ளா மீது பரவலாக ஊற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து... தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை கலந்து இறக்கி, இந்தக் கலவையை டோக்ளா மீது பரவலாகத் தூவவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:56:48 PM
பனீர்  சீஸ் பன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F20.jpg&hash=81c026f680ba111be425af6c6c24cab2e6d0bc90)

தேவையானவை:
 நல்ல தரமான பன் - 6, சீஸ் துருவல், பனீர் துருவல் - தலா அரை கப், கேரட் துருவல், கோஸ் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
பன்னை படுக்கை வாக்கில் 2 துண்டாக வெட்டவும். அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி ஒரு சின்ன பள்ளத்தை ஏற்படுத்தவும். பனீர், சீஸ் துருவலுடன் பச்சை மிளகாய், கேரட் துருவல், கோஸ் துருவல், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பன்னின் (கீழ்ப்பகுதி) பள்ளத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் துருவல் கலவையை அழுத்தி வைத்து மேல்பாக பன்னால் மூடவும். தவாவை சூடேற்றி ஸ்டஃப் செய்த பன்னை அதன்மேல் வைத்து, சுற்றிலும் வெண்ணெய் தடவி, வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு, நன்கு சூடானதும் எடுத்து சாப்பிடக் கொடுக்கவும். லேசாக வறுத்த எள்ளை மேலே தூவியும் பரிமாறலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:58:07 PM
சீஸ்  வெஜிடபிள் ஆம்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F21.jpg&hash=4911adff44ef17b5acc3d09b11194056a009df83)

தேவையானவை:
மைதா மாவு - அரை கப், துருவிய பனீர் - 50 கிராம், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, வெங்காயம், குடமிள காய் - தலா ஒன்று, கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ் - தேவையான அளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். மைதாவை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனுடன் துருவிய பனீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லில் நெய் தடவி மைதா - பனீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி - சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவி, சாப் பிடக் கொடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 01:59:25 PM
டொமேட்டோ ஆம்லெட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F22.jpg&hash=6b3ec6e719c3a3ed3932203dff16c8e5da95153a)

தேவையானவை:
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்),  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,  மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
உப்பு, எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:00:47 PM
க்ரிஸ்பி பால்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F23.jpg&hash=1958a932031efb8404697e8a0531ed0040c9df3d)

தேவையானவை:
அரிசி மாவு - ஒரு கப், மோர் - 2 கப், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அகலமான வாணலியில் மோரை ஊற்றி (அடுப்பை 'சிம்மி’ல் வைத்து) லேசாக சூடு பண்ணவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் சின்ன வெங்காயம், கொத்தமல்லித் தழை சேர்த்து, கலவை சற்று கெட்டியான பதம் வரும் வரை கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு மாவை இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.  கையில் எண்ணெய் தொட்டு, செய்து வைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள டொமேட்டோ கெட்சப் ஏற்றது.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:02:07 PM
பனீர்  வெஜ் ரோல்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F24.jpg&hash=1b595f2769f70618629c226f4efec5df0dc77192)

தேவையானவை:
சப்பாத்தி - 8, துருவிய பனீர் - 200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, வெங்காயத்தாள் - 4, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி - கால் டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
குடமிளகாய், பெரிய வெங்காயம், வெங்காயத் தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முதலில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு குடமிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். துருவிய பனீரை அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி... கொத்தமல்லித் தழை, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ஃபில்லிங் ரெடி.
சப்பாத்தியின் நடுவில் இந்த ஃபில்லிங்கை நீளவாக்கில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வெங்காயத் தாளை மேலே தூவி நன்கு இறுக்கமாக சுருட்டி, அலுமினிய பாயில் (அ) பட்டர்பேப்பரில் வைத்து சுருட்டி... லஞ்ச் பாக்ஸில் போட்டு கொடுத்து அனுப்பலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:03:37 PM
பனானா சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F25.jpg&hash=772fd711ba9edb1c1eb1975290f7332228225169)

தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று (நன்கு மசித்துக் கொள்ளவும்), நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
எண்ணெய் - நெய் கலவை நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தேவையான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். பிறகு வட்ட வட்ட சப்பாத்திகளாகத் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு... எண்ணெய் - நெய் கவலையை சுற்றிலும் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சாப்ஃட்டான இந்த சப்பாத்திக்கு ஃப்ரூட் ஜாம் தொட்டுக்கொள்ளலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:06:51 PM
வொயிட் சென்னா ரோஸ்ட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F26.jpg&hash=44774ff97a398cd96ac452435f079fe0e4a71a44)

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், பச்சரிசி - 2 கப்,  பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய சென்னாவை நன்கு கழுவி... அரிசி, இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளித்து, மாவில் சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்கு டொமேட்டோ கெட்சப் தொட்டு சாப்பிட்டால்... சூப்பர் சுவையில் இருக்கும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:08:20 PM
ஹனி சப்பாத்தி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F27.jpg&hash=2f236d8fcd52392ac41a9252dba9ac6dc1a22f69)

தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், தேன் - தேவையான அளவு, கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
கோதுமை மாவுடன் தேன், நெய், எள், உப்பு சேர்த்துக் கலந்து தேவையான நீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக  திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் - நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:09:39 PM
பிங்க் பூரி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F28.jpg&hash=9c2f5f09154d297f7f87007efcc73b4847533b27)

தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப), கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, பீட்ரூட் வேகவைத்த நீர் - தேவையான அளவு.

செய்முறை:
காய்ந்த மிளகாய், சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனை கோதுமை மாவுடன் கலந்து உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, பீட்ரூட் வேகவைத்த நீர் தெளித்து நன்கு பிசையவும். இந்த மாவை சிறு பூரிகளாகத் தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள வெள்ளரி ராய்தா பெஸ்ட் சாய்ஸ்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:11:05 PM
காலிஃப்ளவர் ரோஸ்ட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F29.jpg&hash=51dbabbebbc54fe607830b785e1633bbdc311719)

தேவையானவை:
தோசை மாவு - 2 கப், சின்ன காலிஃப்ளவர் - ஒன்று, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 6, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, பெருஞ்சீரகம் - தலா அரை டீஸ் பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
காலிஃப்ளவரை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம், தக் காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல் - முந்திரியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக் கிய தக்காளி, காலிஃப்ளவர், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேங்காய் - முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அதன்மீது இந்த காலிஃப்ளவர் மசாலாவைத் தடவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மடித்து எடுக்கவும்.
இதை ஆனியன் ராய்தா தொட்டு சாப்பிடலாம்.
Title: Re: ~ 30 வகை குட்டீஸ் ரெசிபி ~
Post by: MysteRy on March 14, 2014, 02:12:11 PM
ஃப்ரூட்ஸ்  நட்ஸ் பூரி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fnzrint%2Fimages%2F30.jpg&hash=b5819fadaac95e277e2ec4436d660a99b6ab32f0)

தேவையானவை:
கோதுமை மாவு, பால் - தலா 2 கப், பொடியாக நறுக்கிய ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் (மூன்றும் சேர்த்து) - 2 கப், வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு பூரிகளாகத் திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து, கரைந்ததும் இறக்கி ஆற விடவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை சேர்த்து, பூரி மீது ஊற்றி சாப்பிடக் கொடுக்கவும்.