FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 07, 2014, 06:03:33 PM

Title: பாரதி மறுபடி நீ பிறந்திடு
Post by: thamilan on March 07, 2014, 06:03:33 PM
பாரதியே
பாதியில் போய்ச் சேர்ந்தாய்
சாகவரம் பெற்றினும்
சிலகாலம் வாழ்ந்திருந்தால்
தமிழ்நாட்டின் பெரும்புலவன்
தற்கொலை புரிந்திட்டான் என
தரணியே தலை குனிந்திருக்கும்

கட்டாயம் நடக்குமென
கண்டிட்ட கனவெல்லாம்
கானல் நீரனதிங்கே

காவிரி தென்பெண்ணை பாலாறு  இங்கே
காய்ந்துக் கிடக்குது
வெறும் மணலாறாய்
வையம் போற்றிய வைகையவள்  இன்று
வெறும் வாய்க்காலாய்
காவிரிதாயவள் கண்ணீரும் வற்றி
கையேந்தி நிற்கிறாள் கர்நாடகத்திடம்

சிங்களத் தீவிநிட்கொரு பாலமமைத்து
சிங்கத் தமிழர்தம் உறவு கேட்டாயே இன்று
ஈழத்தமிழர்கள் ஈனத்தமிழர்களாய்
உயிர் மானமிழந்து வீழ்ந்தனரே
உதவிக்கரம் நீட்ட ஒருவரும் வரவில்லையே

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் என்றாய்
பாரதுக்குள்ளே பார்க்கும் இடமெல்லாம்
பஞ்சமில்லை பார்களுக்கு

பாரதியே நீ
மறுபடி மானிடனாய் பிறப்பதென்றால்
பரிதாப கவிஞனாக
ஒரு போதும் பிறந்திடாதே

சுடுநெருப்பாய் நீ சொல்லிவைத்த
சீர்திருத்த கருத்துக்கள்
நனவாக வேண்டுமெனில்

எழுதுகோலை தூக்கி எறி
கையில் சாட்டையுடன் மறுபடி பிறந்திடு
பாட்டுக்குத் திருந்தாத
பாரதத்தின் புதல்வர்கள்
சாட்டையின் சொடுக்குக்கு
சந்தோசமாக பணிந்திடுவார்
 
Title: Re: பாரதி மறுபடி நீ பிறந்திடு
Post by: ammu on March 09, 2014, 06:51:39 PM
பாரதியை  புதைக்கவில்லை  விதைத்திருக்கிறோம் 
நண்பரே 
பல  பாரதிகள்  பாரதத்திலே 
அதில்  சில  நிழல்  உங்கள்  உள்ளே  :)
Title: Re: பாரதி மறுபடி நீ பிறந்திடு
Post by: thamilan on March 10, 2014, 09:45:32 PM
அம்மு நன்றி
பாரதி கண்ட பாரதம் பரிதாபமான நிலையில். ஒரு தமிழ்மகனாக ஒரு குடிமகனாக என்னுள்ளும் பாரதி கண்ட கனவு பலிக்காத என்று ஒரு ஆவல் என்றும் இருக்கிறது
Title: Re: பாரதி மறுபடி நீ பிறந்திடு
Post by: பவித்ரா on March 20, 2014, 07:22:58 AM
என்ன தமிழன் பொறுக்க முடியாத கோவமா பாரதி சொன்னது நடக்கலன்னு அது கனவாகவே இருந்து விடாது நடக்கும்