FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 06, 2014, 11:35:09 PM

Title: பேதை நின் நினைவின் போதையில் .........
Post by: aasaiajiith on March 06, 2014, 11:35:09 PM
  
பொதுவாக
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்தென்ற
போதனையை
போவோர் வருவோர்க்கெலாம்
போதும் போதுமென்றளவிற்கு
போதித்து வந்தவன் நான், இன்றோ
பேதை உன்னுடன் பேசுதலோடு,நின் நினைவின்
போதையில் திளைத்து தத்தளித்தும்
போதாது போதாதென புத்தியும் சித்தியும்
பேதலித்து தான் திரிகின்றேன் ......