பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/t1/1620712_571936959570434_595274243_n.jpg)
* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால், உடலும் நன்றாக இருக்கும். உடலை சுறுசுறுப்பாக்கினால் மனதில் உற்சாகம் நிலைக்கும்.
* அறிவை அகங்கார மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கி விட்டால் தெய்வசக்தியும், ஞானமும் மேலோங்கும்.
* உடல் மட்டுமின்றி உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மை உண்டானால் வாக்கிலும் ஒளியுண்டாகும்.
* எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று உண்மையாக வேண்டினால், கடவுளும் மனமிரங்கி அருள்புரிவார்.
* அறியாமை என்னும் விஷப்பூச்சியை மனதிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இல்லாவிட்டால் இன்பம் அனைத்தும் காணாமல் போய் விடும்.
* இளம்வயதில் ஏற்படும் அபிப்ராயம் ஆற்றல் வாய்ந்தது. இதை மறப்பதோ, மாற்றுவதோ கடினம்.
* நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் கடவுளை அறிய முடியாது. இரக்க சிந்தனை இருந்தால் இறையருள் கைகூடும்.
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/1959239_584157335015063_307421586_n.jpg)
* தீமை செய்யும் புகைக்கு நடுவில் ஒளி தரும் நெருப்பு இருப்பதைப் போல, பகைவனின் உள்ளத்திலும் அன்பே வடிவான கடவுள் வீற்றிருக்கிறார்.
* தெளிந்த தேனில் சிறிது விஷம் சேர்ந்தாலும், அது பயனற்றாகி விடும். அதுபோல, உள்ளத்தில் வஞ்சகம் மிக்க தீய எண்ணம் புகுந்தால் மனமும் பாழாகி விடும்.
* பிறருக்கு கேடு நினைப்பவன் தனக்கே தீங்கு உண்டாக்கிக் கொள்கிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது.
* அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை உணருங்கள். தின்ன வரும் கொடிய புலியைக்கூட அன்போடு போற்ற வேண்டும். அன்னை பராசக்தியே புலி வடிவில் வருவதாக எண்ணி வணங்க வேண்டும்.
* உலகில் எல்லாரும் எதிர்த்து நின்றாலும் அச்சம் சிறிதும் கொள்ளக் கூடாது. தேடிய பொருள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும், அச்சம் கொள்வது ஆகாது.
* உயிரை எடுக்கும் காலனைக் கூட புல்லைப் போல மதியுங்கள். பயம் என்னும் பேயை ஓட விரட்டுங்கள்.
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/10168130_586124984818298_1178426265_n.jpg)
* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.
* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.
* "எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்' என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்
* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.
* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.
* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.
* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10154406_595509367213193_3213883820975751669_n.jpg)
* தானதர்மம் செய்வது நமது கடமை. லாப நஷ்டம் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தால் தானம் செய்ய முடியாது.
* செய்யும் தொழிலால் பிறருக்கு நன்மை கிடைக்கும் என்றால் அதுவே நல்ல தர்மம் தான்.
* அநியாயத்தை அநியாயத்தால் கொல்ல முடியாது. நியாயத்தால் மட்டுமே அதனை அழிக்க முடியும்.
* அச்சம் இருக்கும்வரை மனிதன் அறிவாளியாக முடியாது.
* ஓயாமல் உழைத்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
* ஒன்றை அடக்க முயன்றால் அதன் இயல்பை அறிவது அவசியம். அறிய முடியாத ஒன்றை யாராலும் அடக்க முடியாது.
* எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வாழுங்கள்.
* அன்பு வெறும் கொள்கை அளவில் இருந்தால் போதாது. செயலளவில் இருக்க வேண்டும்.
* அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் கிடையாது. அன்பு மிக்கவர்கள் வாழ்வில் இன்பத்தை அடைந்தே தீருவர்.
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10422310_615719541858842_5407661666796557936_n.jpg)
* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் வடிவமே. சூரியன், சந்திரன், விண்மீன்கள், மேகம் எல்லாமே கடவுள் அம்சமே.
* உயிர்கள் மட்டுமல்ல; உயிரற்றவையும் கடவுளே. எழுதுகோல், எழுத்தில் கூட கடவுளே உறைந்திருக்கிறார்.
* கடவுள் ஒருவரே. ஆனால் "என் தெய்வம் வேறு! உன் தெய்வம் வேறு!' என்று மக்கள் ஒருவருக்கொருவர் பகையுணர்வு கொள்வது கூடாது.
* மனக்கட்டுப்பாடுடன் வாழ்தல், பிறர் துயர் தீர்த்தல், மற்றவர் நலனுக்காக கடவுளிடம் வேண்டுதல் இவற்றை கடமையாகக் கொண்டிருங்கள்.
* அஞ்சாமை மனிதனுக்கு அவசியம். உச்சி மீது வானம் இடிந்து விழுந்தாலும் துணிச்சலுடன் இருங்கள்.
* சோர்வு, பயம், துன்பம், கவலை இவையெல்லாம் அன்பிருக்கும் இடத்தில் இருப்பதில்லை. அன்பு மனதில் குடிபுகுந்தால் நமக்கென்றும் அழிவில்லை.
* ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம். நீதிநெறி தவறாத நல்லவர்களே உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.
பாரதியாரின் நற்சிந்தனைகள்:-
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/10154406_595509367213193_3213883820975751669_n.jpg)
* எண்ணெய், தன்னையே எரித்துக் கொண்டுவிளக்கிற்கு ஒளி தருகிறது. நீங்களும்
உங்களை பிறர் சேவைக்கு அர்ப்பணியுங்கள்.
* மற்றவர்கள் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து விடாமல் காத்து கொள்ளுங்கள். செய்ய
வேண்டிய கடமையிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாதீர்கள்.
* தர்மத்தைத் தவிர உலகில் உள்ள மற்றதெல்லாம் வெறும் பொய்.
* உடல்நிலையைக் கவனிக்காவிட்டால், வாழ்வே துன்பமாகிவிடும். அதனால்,
ஆரோக்கியத்தைப் பேணுங்கள். உடம்பை வலிமையாக்க வேண்டுமானால், உள்ளமும்
வலிமையாக இருக்க வேண்டும்.
* தெய்வமே அடைக்கலம் என்று உங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள். வாழ்வில்
நன்மை காண்பீர்கள்.
* மனவலிமை இல்லாதவனின் உள்ளம், குழம்பிய கடலுக்கு ஒப்பாகும்.
* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி
வந்து குவியும்.