FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 04, 2014, 02:06:57 PM

Title: ~ விவேகானந்தரின் பொன்மொழிகள்:- ~
Post by: MysteRy on March 04, 2014, 02:06:57 PM
விவேகானந்தரின் பொன்மொழிகள்:-

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/t1/1972364_572242252873238_1224509275_n.jpg)


* வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

* வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம். அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணமாகும்.

* உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ. உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்

* மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும் எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும் மனிதர்களே உயர்ந்தவர்கள். மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.

* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

* அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.