FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 04, 2014, 01:58:37 PM

Title: ~ நத்தைகள் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on March 04, 2014, 01:58:37 PM
நத்தைகள் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1507992_573755269388603_2105726714_n.jpg)


நத்தை மெல்லுடலிகளில் வயிற்றுக்காலிகள் வகுப்பைச் சேர்ந்த விலங்கினமாகும். இவற்றின் முதிர்விலங்குகளில் சுருளி வடிவிலமைந்த ஓடு காணப்படும். ஓட்டின் கீழாக தசைப்பாதம் காணப்படும். நத்தை என்பது பொதுவாக கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.

Pulmonata வகையைச் சேர்ந்த நத்தைகள் நுரையீரல்களினால் சுவாசிக்கின்றன. அதேவேளை paraphyly வகையைச் சேர்ந்த நத்தைகள் பூக்களினால்(செவுள்களினால்) சுவாசிக்கின்றன.

மானுசுத் தீவில் காணப்படும் மரகதப் பச்சை நத்தை என்பது நத்தைகளில் பொதுவாகக் காணப்படாத பச்சை நிறத்தில் உள்ளது