FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 26, 2011, 03:54:16 AM
-
சுவிஸ்ல இன்னுமா பணம் இருக்கும்?
எனக்கு ஒரு சந்தேகம். இதுக்கு பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளாகவே சுவிஸ்ல இருக்கிற பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரணும், அதை நாட்டுடமையாக்கணும் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கு என்ன சந்தேகம்னா இன்னுமா அந்த பணம் சுவிஸ்ல இருக்கும்?.
இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா? (சுவிஸ் மாதிரி வேறு சில வங்கிகளும் இருப்பதாக தகவல்).
அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா? (நிறைய பண்க்காரர்களோட உறவினர்கள் வெளிநாட்டிலே செட்டில் ஆகி இருக்காங்க).
அல்லது இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம் ...அட தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்.
நம்ம அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குமுன்னே சுவிஸ் பணம் கரைஞ்சிடும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லுங்கள் அந்த பணம் இன்னும் சுவிஸ்ல அப்படியே இருக்கும்னு நினைக்கிறீங்க?
-
அதை கொண்டு வரணும்னு நினைத்திருந்தால் இத்தனை காலம் தேவை பாடாது
அதை வேறு இடம் மாற்ற தான் இத்தனை காலம்
இனி வரும் காலங்களில் கண் துடைப்பு நாடகங்கள் நடக்கும்