முளைகட்டிய பயறு சாதம்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1393741862.jpeg&hash=236dd3afc98ab3fa41aefe04a9a1c39c6c10dfa0)
தேவையானவை:
முளை கட்டிய பச்சைப்பயறு - 1 கப், வடித்த சாதம் - 2 கப், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், கடுகு, சீரகம், எலுமிச்சைச் சாறு - தலா 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 தேக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சைப் பயறை சேர்த்து வதக்கவும். பின்னர் வடித்த சாதம், உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து இதனுடன் கலந்து இறக்கவும், இறுதியாக வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து, சேர்த்து, கலந்து பரிமாறவும்.