FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: singam on February 27, 2014, 09:09:39 PM

Title: இயல்பு
Post by: singam on February 27, 2014, 09:09:39 PM


கற்பனையில் மிதப்பது
கவிஞனின் இயல்பு

காட்சியை வடிப்பது
ஓவியனின் இயல்பு

கருங்கல்லை காவியமாக்குவது
சிற்பியின் இயல்பு

வளங்களை வாரி வழங்குவது
இயற்கை அன்னையின் இயல்பு

கடைக்கண் பார்வை வீசுவது
அழகு பெண்களின் இயல்பு

எதையும் எளிதாய் பார்ப்பது
மிடுக்கான ஆண்களின்  இயல்பு

உயிரினும்  உன்னதமாய் இருப்பது
நட்பின் இயல்பு

உங்கள் நண்பன்
சத்தியம்