FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: singam on February 26, 2014, 07:25:11 PM
-
கற்பனை என்னும்
விதை எடுத்து
பாசம் என்னும்
நிலத்தில் விதைத்து
அறிவு என்னும்
நீரை பாய்ச்சி
அன்பு என்னும்
உரம் தெளித்து
புன்னகை என்ற
பூக்களாய் பூத்து
கண்ணியம் என்னும்
காய் காய்த்து
நட்பு என்னும்
கனிகளை பறிக்கட்டும்
எனது முதல் கவிதை
உங்கள் நண்பன்
சத்தியம்
-
முதல் கவிதையே முத்துக்கவிதையாய் ....
இதோ, அதே வரிசையில் எனது பதிலும்
இதோ, அதே வரிசையில் எனது பதிலும்
இணைந்திடாதா எனும் அற்ப ஆசையில்
ஒர் அற்பனின்
வாழ்த்துக்கள் !!!
-
கவிதை அருமை ! மிக அழகான கவிதை ! எளிமையான வார்த்தைகள் !
கவிப்பயணம் தொடரட்டும் .... நண்பரே !