சுக்கு மல்லி குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F03%2Fndmxzj%2Fimages%2Fp193.jpg&hash=ddac33270cce782baddc6a4678048fc84aa89470)
தேவையானவை:
உரித்த சின்ன வெங்காயம் - 150 கிராம், உரித்த பூண்டு பற்கள் - 10, புளி - எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், வெந்தயம், மிளகு, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், ஆச்சி சுக்கு மல்லி பொடி - ஒன்றரை டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 3 குழிக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு டீஸ்பூன் நல்லெண் ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நல்லெண் ணெயை கடாயில் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். அதனுடன் ஆச்சி மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீரை ஊற்றி... மிக்ஸியில் பொடித்து வைத்த பொடியையும், ஆச்சி சுக்கு மல்லி பொடியையும் சேர்க்கவும். கொதித்தவுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
இந்த சுக்கு மல்லி குழம்பு ஜீரண சக்தியை நன்கு தூண்டக் கூடியது.