வேர்க்கடலை - சுக்கு பொடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1392015041.jpeg&hash=c86b9391d24231022875d8a500a4936983ca109d)
தேவையானவை:
வேர்க்கடலை - 200 கிராம்,
காய்ந்த மிளகாய் - ஆறு,
பொடித்த சுக்கு - அரை
தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - கால் தேக்கரண்டி,
உப்பு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், ஓமம்,
பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துப் பொடித்து, அதனுடன்
சுக்குத் தூள் கலந்து வைக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொரியல் வகைகளுக்கும் மேல் பொடியாக
உபயோகிக்கலாம்.