FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on February 22, 2014, 08:03:10 PM
-
சில்லென்ற காற்றோடு மழைத்துளிகள் சேர,
அருகினில் அன்பான இதயமோ என்னோடு,
விரல் பிடித்து கூட்டிசென்றது என்னை...
வலப்புறத்தில் பசுமையான கிராமம்,
இடப்புறத்தில் நதியின் சினுங்கல்,
நதியின் நடுநடுவே மரங்களின் மேல்,
அழகிய அலகோடு அமர்ந்திருக்கும் பறவைகள்,
நடந்து செல்லும் பாதையின் நடுவே...,
உணர்ந்தேன் என் அன்பு இதயத்தின் அணைப்பை..!
தொடர்ந்து செல்கையில் கேட்டோம்,
அழகிய குயிலின் பாடல் கீதம்...
என்றாலும்,
உணர்ந்தேன் என்னவளின் அன்பான குரலிற்கு இணையில்லாததாய்!
தொலை தூரம் வந்து விட்டோம் காட்டிற்குள்,
தொலைகின்ற நேரம் அறியாமல் இருவரும்,
காரணம் புரியாமல் இருந்தோம் காதலில்,
உணர்ந்தேன் என் உணர்விலும் கலந்துவிட்டால் என்று!
முடிவில்லாத காடோ என்று வினவுகையில்,
கூறினால்...
முடிவுபெறும் காட்டினில் நடுவே,
முடிவில்லாத காதல் கவிதையாய் நாம் என்று!!!