FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Maran on February 22, 2014, 11:16:27 AM

Title: சிங்கத்தை போல குரல் எழுப்பபும் பறவை எது தெரியுமா...?
Post by: Maran on February 22, 2014, 11:16:27 AM
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்...

ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும்.

புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும்.

யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும்.

ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம்.

கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.

எறும்புகள் தூங்குவதே இல்லை.

நாய்களால் மனிதனின் முகத்தை பார்த்தே அவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துக்கொள்ள முடியும்.

நெருப்புகோழியால் குதிரையை விட வேகமாக ஓடமுடியும். ஆண் நெருப்புகோழியால் ஒரு சிங்கத்தை போல குரல் எழுப்பமுடியும்.