FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 14, 2014, 01:21:46 PM

Title: ~ சரும நோய் நீங்க பாட்டி வைத்தியம்:- ~
Post by: MysteRy on February 14, 2014, 01:21:46 PM
சரும நோய் நீங்க பாட்டி வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1891148_688326694522982_1438593221_n.jpg)


பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து, அக்கி மற்றும் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் நிவாரணம் பெறலாம்.

புளிச்சக்கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் கரப்பான் போன்ற தோல் நோய்கள் தீரும்.

அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.

கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை, சொறி, சிரங்கு ஓன்ற தோல் நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரைச் சாறில் சிறிது மஞ்சள் தூள் கலந்து படை, சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் குணம் பெறலாம்.

அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரைச் சாறில் பரங்கிப்பட்டையை ஊற வைத்து, உலர்த்தி பாலில் வேக வைத்து மீண்டும் உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் சாப்பிட்டால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.

ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல், படை, கரும்படி போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

படை, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பண்ணைக் கீரையை அரைத்துப் பற்றுப்போட்டால் அவை குணமாகும்.

பரட்டைக் கீரையை அரைத்து சொரி, சிரங்குகள் மீது தடவினால் அவை குணமாகும்.

பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்