FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on February 14, 2014, 12:20:59 AM

Title: புன்னகை ஒன்றே போதுமடி
Post by: தமிழன் on February 14, 2014, 12:20:59 AM
பாத்தி கட்டி
தண்ணீர் ஊற்றி
மொட்டு விட்டு
பூ பூக்கும் வரை
காத்திருக்க வேண்டுமா என்ன
ஒவ்வொரு முறையும்
நீ சிரிக்கும் போது
பூக்கள் பூக்கின்றனவே

செடியில் பூத்தபூவை
உன் கூந்தலில் சூடுகிறேன்
உன் சிரிப்பில் பூத்தபூவை
என் இதயத்தில் சூடிக்கொள்கிறேன்
Title: Re: புன்னகை ஒன்றே போதுமடி
Post by: பவித்ரா on February 17, 2014, 02:13:48 PM
செடியில் பூத்தபூவை
உன் கூந்தலில் சூடுகிறேன்
உன் சிரிப்பில் பூத்தபூவை
என் இதயத்தில் சூடிக்கொள்கிறேன்

அழகா அருமையா இருக்கு இந்த வரிகள் .மீண்டும் உங்கள் கவிதை       வாசிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்