FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: Global Angel on November 25, 2011, 05:47:46 AM
-
அபாயம்
காதல் என்ற பெயரில் தீராத உபத்திரவம் கொடுக்கும் சில பல ஆண்களை மனநலமில்லாதவர்களின் பட்டியலில் சேர்ப்பதை தவிர வேறு வழி இல்லை. உன்னை நான் காதலிப்பதால் நீ என்னைத் தவிர வேறு ஒருவரிடமும் பழகவோ பேசவோ கூடாது என்று ஒரு மடையன் ஒரு பெண்ணிடம் சொல்வானானால் அவனுக்கு மன நலம் இல்லை என்பது தெளிவாகிறது அவனை தகுந்த மருத்துவரிடம் கூட்டிச் சென்று சிகிச்சை அளிப்பதை தவிர வேறு வழி கிடையாது.
பெண்களை பலவிதத்தில் கொடுமை படுத்தும் ஆண்களின் வெறிச்செயல்களில் இதுவும் ஒன்று, இப்படிப்பட்ட ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்கள் அவர்களிடமிருந்து மீண்டு வருவதென்பது மிகவும் சிரமமான காரியம் என்றாலும், மீண்டு வராவிட்டால் அந்த பெண்ணின் மன நலமும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிவரும் என்பது உறுதி.
தான் ஒரு பெண்ணை விரும்பி விட்ட காரணத்தினால் அவளும் தன் காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்ப்புறுத்துவது பெண்ணுக்கு எதிரான கொடுமை, இறுதியில் அவளை கொலை செய்ய முடிவெடுப்பது, இவற்றை தகுந்த சமயத்தில் கவனியாமல் விட்டு விட்டால் பின்னர் விபரீத முடிவுகளை சந்திக்க நேருகிறது. தான் விரும்பிவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணும் தன்னை தான் நேசிக்க வேண்டும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும் என்பதை தெளிவான மன நிலையில் சிந்திக்க தெரியாதவன் மனிதனே இல்லை என்று கூட சொல்ல முடியும்.
ஒரு பெண்ணை எந்த நிலையிலும் வற்புறுத்தும் அதிகாரம் ஒரு ஆணுக்கு எந்த சமூக அமைப்பும் வழங்கவில்லை என்பது உறுதி, சட்டத்தின் முன் இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்கு பொருத்தமானவர்கள் என்றும் இந்திய பெண்கள் உரிமைச்சட்ட விதிகள் சொல்லுகிறது. ஒரு பெண் கிடைக்காவிட்டால் அடுத்த பெண்ணை நேசிக்க தெரியாதவனை பைத்தியக்காரன் என்று தானே சொல்ல முடியும்.
வற்ப்புறுத்தி கிடைப்பது காதலோ அன்போ இல்லை, இதை அறியாதவன் மூடனும் மன நலம் குன்றியவனுமாவான். இதனால் காதல் என்றவுடன் கண்ணை கட்டிக் கொண்டு காதலில் மூழ்கிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படவேண்டும் என்பதை இளம் பெண்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது
-
ஏஞ்செல் இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. இப்போதெல்லம் பல பெண்கள் கூட இப்படி தான் உள்ளனர்.
இதுவும் ஒரு வித மனநோய் தான்
-
ஏஞ்செல் இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. இப்போதெல்லம் பல பெண்கள் கூட இப்படி தான் உள்ளனர்.
உண்மைதான் ரெமோ ஆனால் காதல் வன்முறை என்று வரும் போது அங்கே ஆண்கள்தான் பலத்தை காட்டுகின்றார்கள் பெண்கள் பயந்து ஒதுங்க வேண்டிய நிலை .... ஆண்கள் எது வேணும் என்றாலும் செய்யலாம் ... பெண்கள் அப்படி எதவாது ஒன்று செய்தாலே அவள் சமூகத்தில தீண்ட தகாத அந்தஸ்த்தை பெற்றுவிடுவாள் .... காதல் மிரட்டல் வன்முறைகளில் ஆண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றார்கள் ..
-
// பெண்கள் பயந்து ஒதுங்க வேண்டிய நிலை .... ஆண்கள் எது வேணும் என்றாலும் செய்யலாம் ... பெண்கள் அப்படி எதவாது ஒன்று செய்தாலே அவள் சமூகத்தில தீண்ட தகாத அந்தஸ்த்தை பெற்றுவிடுவாள் .... காதல் மிரட்டல் வன்முறைகளில் ஆண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றார்கள் ....//
.இன்றைய காலகட்டத்தில் சட்டம் பெண்களுக்கு சாதகமா இருப்பதால் பெண்கள் அதை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்
பெண்கள் இப்போதெல்லாம் பயந்து ஒதுங்குவதில்லை, பழி பாவத்திற்கு அஞ்சாமல் தவறு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் இப்போது