மினி ரெசிபி! - வெங்காய கூட்டு!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1391326986.jpeg&hash=0407d8bc3e6597e1f4e6b6c5598bdcef409f444d)
தேவையானவை:
மலர வேகவிட்ட பாசிப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடித்த மிளகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கடுகு, கறிவேப்பிலை, நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் நெய்யை காயவிட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்று வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை, சப்பாத்தி மற்றும் சாதம் ஆகியவற்றுடன் பரிமாறலாம். சூடாகத்தான் பரிமாற வேண்டும். மிளகாய்க்கு பதில் மிளகு சேர்ப்பது இதன் தனிச்சிறப்பு.